•பார்த்தீனியம் - செடியும் நாவலும்
இந்த “பார்த்தீனியம்” என்னும் விஷச் செடி இந்திய ராணுவத்தால் இலங்கையில் பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த விஷச் செடியை என்றோ ஒருநாள் தமிழ் மக்கள் தம் மண்ணில் இருந்து முற்றாக ஒழித்து விடுவர் என்று நம்பலாம்.
ஆனால் இந்திய ராணுவத்தின் அக்கிரமங்களை தமிழ் மக்களால் தம் மனங்களில் இருந்து நீக்கிவிட முடியுமா?
நிச்சயமாக முடியாது என்பதையே தமிழ்நதி எழுதியுள்ள பார்த்தீனியம் நாவல் வாசிப்பு உணர்த்துகிறது.
கடந்த வருடம் வெளியான நாவல். ஈழத் தமிழர் போராட்டத்தைப் பற்றி கூறும் நாவல்களில் ஒன்று.
ஆனால் இதுவரை வெளிவந்த அனைத்து நாவல்களில் இருந்தும் வித்தியாசமான ஒரு நாவல்.
ஆம். இந்திய ஆக்கிரமிப்பு ராணுவத்தின் அக்கிரமங்களை தோல் உரித்தக் காட்டியிருக்கும் ஒரே நாவல் இது.
தமிழக எழுத்தாளர்கள் மட்டுமன்றி எமது ஈழத்து எழுத்தாளர்களும் எழுதாத அல்லது எழுத விரும்பாத இந்திய ராணுவத்தின் பக்கங்களை எழுதியமைக்கு தமிழ்நதிக்கு நிச்சயம் முதலில் பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும்.
இந்த நாவல் நிச்சயம் பிற மொழிகளில் குறிப்பாக ஆங்கில மொழியிலாவது மொழிபெயர்த்து வெளிவரவேண்டும்.
உலகில் தமிழ் இலக்கியம் இருக்கும்வரை அதில் பார்த்தீனியம் என்ற இந்த நாவலும் இருக்கும்.
பார்த்தீனியம் என்ற இந்த நாவல் இருக்கும்வரை தமிழ் மக்கள் மீது இந்திய ராணுவம் இழைத்த கொடுமைகளும் வரலாற்றின் நினைவில் இருக்கும்.
குறிப்பு- இந்த நாவல் தற்போது இலங்கையிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. அனைவரும் வாங்கி படிக்க வேண்டிய ஒரு நாவல் இது.
No comments:
Post a Comment