Thursday, June 29, 2017

வென்றது, சம்பந்தர் அய்யாவின் சாணக்கியமா? தமிழ் மக்களின் போராட்டமா?

•வென்றது,
சம்பந்தர் அய்யாவின் சாணக்கியமா?
தமிழ் மக்களின் போராட்டமா?
சம்பந்தர், மாவை, சுமந்திரன் கும்பலிடம் தனிப்பட்ட நலன்களை பெற்றுக்கொள்ளும் சிலர் சம்பந்தர் அய்யாவின் சாணக்கியம் வென்றுவிட்டதாக கூறிவருகிறார்கள்.
முதலமைச்சரை நீக்குவதற்கு சம்பந்தர் அய்யாவின் கும்பல் போட்ட பலநாள் திட்டத்தை தமிழ் மக்கள் முறியடித்திருக்கிறார்கள்.
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஒரு முதலமைசருக்கு எதிராக முன்வைத்த நம்பிக்கையில்லா தீர்மானம் மக்கள் போராட்டத்தால் வாபஸ் பெறப்பட்டிருக்கிறது.
வென்றிருப்பது சம்பந்தர் அய்யாவின் சாணக்கியம் அல்ல. மாறாக மக்களின் போராட்டமே வென்றிருக்கிறது.
உண்மை நிலை இப்படியிருக்க கொஞ்சம்கூட கூச்சமின்றி சம்பந்தர் அய்யாவின் சாணக்கியம் வென்றது என்று சிலர் செம்பு தூக்கிறார்கள்.
அண்மையில் கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்ட வள்ளுவர் சிலையின் கீழ் எழுதப்பட்டிருந்த “ஈழம்” என்ற சொல் இலங்கை அரசின் உத்தரவுக்கு அமைய அழிக்கப்பட்டுள்ளது.
ஈழம் என்பது இலங்கையின் மறுபெயர் ஆகும். இது பல நூறு வருடங்களாக தமிழ் மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சொல் அகும்.
ஆனால் அச்சொல் பயங்கரவாதத்தை தோற்றுவிப்பதாக கூறி அதனை அழிக்க உத்தரவிட்டுள்ளது இலங்கை அரசு.
இனி அடுத்து தமிழ் மொழியே எழுதக்கூடாது என்று இலங்கை அரசால் உத்தரவு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய சம்பந்தர் அய்யாவோ அல்லது அவரது கும்பலோ வழக்கம்போல் வாய் திறக்காது மௌனமாக இருக்கிறது.
இப்படியிருப்பது சாணக்கியம் அல்ல. இது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகத்தனம் ஆகும்.
சம்பந்தர் அய்யா தனக்கு பதவி தந்தது ரணில் மற்றும் மைத்திரி என நம்புகிறார்.
அவைத் தலைவர் சிவஞானம் வடமாகாண ஆளுநர் தனக்கு பதவி தருவார் என நம்புகிறார்.
ஆனால் இவர்கள் எல்லோரும் “மக்களே பதவி தருகிறார்கள். மக்களே பதவியை பறிக்கும் வல்லமை கொண்டவர்கள்” என்ற உண்மையை உணர மறுக்கிறார்கள்.

No comments:

Post a Comment