சோழியன் குடுமி சும்மா ஆடுவதில்லை
காரியத்துடன்தான்; ஆடும் என்பதை வடமாகாணசபை நிரூபித்துள்ளது.
காரியத்துடன்தான்; ஆடும் என்பதை வடமாகாணசபை நிரூபித்துள்ளது.
வடமாகாணசபை உறுப்பினர்களுக்கு சொகுசு வாகன அனுமதிப் பத்திரம் அரசு வழங்கியுள்ளது.
சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான இவ் அனுமதிப் பத்திரம் இதுவரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
முதல்முறையாக வடமாகாணசபை உறுப்பினர்களுக்கு மட்டும் தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதுவும் ஜனாதிபதி மைத்திரியின் விசேட அறிவித்தலில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தென்னிலங்கை வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது. உதவிக்காக அரசு வெளி நாடுகளில் கை யேந்துகிறது. ஆனால் மறுபுறத்தில் வடமாகாணசபை உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனம் வழங்குகிறது.
அண்மையில் சம்பந்தர் அய்யா முள்ளிவாய்க்கால் சென்றபோது மக்கள் அவரிடம் கேள்வி கேட்டு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
ஆனால் வடமாகாண சபையில் அவசர அவசரமாக சம்பந்தர் அய்யாவுக்கு மன்னிப்பு தெரிவித்து பிரோரணை நிறைவேற்றினார்கள்.
இப்போதுதான் தெரிகிறது. இந்த சொகுசு வாகன அனுமதிப் பத்திரம் பெறுவதற்காகத்தான் இந்த மன்னிப்பு பிரோரணை அவசரமாக நிறைவேற்றப்பட்டது என்று.
இனி காணாமல் போனவர்களின் உறவுகளின் போராட்டம், இரணைதீவு மக்களின் போராட்டம், கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் எல்லாம் அரோகரா தான்.
No comments:
Post a Comment