•போப்பாண்டவரும் ஆபிரகாம் சுமந்திரனும்!
போப் ஆண்டவர் ஒரு நாள் தேவாலயத்தில் ஆராதனை செய்து கொண்டிருந்தார்.
அருகே அவரது சீடர்கள் உதவி செய்து கொண்டிருந்தார்கள்.
அந்த நேரத்தில் ஒரு அமெரிக்கன் நீண்ட கோட் உயரத் தொப்பி சகிதம் வந்து போப் ஆண்டவர் முன் பணிவாக வணக்கம் சொல்லி ஏதோ கிசு கிசுத்தான்.
போப் ஆண்டவர் கடுப்பாகி “நோ நோ” அதெல்லாம் முடியாது” என்றார்.
உடனே அந்த அமெரிக்கன் இன்னும் பணிவாக “5 மில்லியன் டாலர்..” என்றான்.
“சாரி..அதெல்லாம் முடியாது” என இன்னும் கடுமையாகச் சொன்னார் போப்.
“ பத்து மில்லியன் டாலர் …” என இழுத்தான் அமெரிக்கன்.
“முடியாது..முடியாது” என இன்னும் கோபமாகச் சொன்னார் போப் ஆண்டவர்.
“ சரி பாதர் 10 பில்லியன் டாலர்” என்று அழுத்தமாகச் சொல்லி போப் ஆண்டவரின் முகத்தைப் பார்த்தான் அமெரிக்கன்.
போப் ஆண்டவர் கடுங்கோபமாகி “ நோ நோ கெட் அவுட்..” என்று கத்தியவுடன் அந்த அமெரிக்கன் ஓடிப்போனான்.
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த ஒரு சீடர் போப் அருகில் சென்று “பாதர்! நீங்க இப்பிடிக் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லையே. அந்த அமெரிக்கன் அப்படி என்ன சொன்னான்?”
போப் ஆண்டவர் கோபம் தணியாமல் சொன்னார்: “ ஒண்ணுமில்ல நாம ‘சர்ச்’ல ஜெபம் சொல்லி முடிச்சவுடன் ‘ஆமென்’னு சொல்றோம் இல்லையா. அதுக்குப் பதில் ‘கொகோ கோலா’ன்னு சொல்லணுமாம்..”
அடுத்து இலங்கையில் இருந்து வந்த ஆபிரகாம் சுமந்திரன் போப்பாண்டவரை வணங்கி “ நீங்கள் இலங்கை வரவேண்டும். மகிந்த மாத்தையாவுடன் கை குலுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
உடனே போப்பாண்டவர் “ நோ நோ அந்தாள்; கையில தமிழர் ரத்தம் இன்னும் காயவில்லை. நான் எப்படி அவருடன் கைகுலுக்குவது” என்று மறுத்தார்.
ஆபிரகாம் சுமந்திரன் போப்பாண்டவர் காதில் ஏதோ குசுகுசுத்தார். உடனே போப்பாண்டவர் இலங்கை வர சம்மதித்தார்.
ஆபிரகாம் சுமந்திரன் மகிழ்வுடன் திரும்பிச் சென்றார்.
அப்போது அருகில் இருந்த சீடன் “ பாதர்! ஒரு இனப் படுகொலையாளியுடன் கைகுலுக்க நீங்கள் சம்மதித்தது ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் ஏன் சம்மதித்தீர்கள் என்று புரியவில்லை”
“ஒன்றுமில்லை. இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றதை விசாரிப்பதாயின் போப்பாண்டவர்களின் தவறுகளையும் விசாரிக்க வேண்டும் என்று தான் ஜ.நா வில் பேசப்போவதாக கூறுகிறார்” என்றார் போப்பாண்டவர்.
இதைக்கேட்ட சீடர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்துவிட்டார்.
குறிப்பு- இது சிரிப்பதற்கு மட்டும் அல்ல. சிந்திப்பதற்கும்கூட.
No comments:
Post a Comment