•இந்தியாவின் கலை இலக்கிய கலாச்சார ஆக்கிரமிப்பு
இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு என்பது இராணுவம் மற்றும் பொருளாதார ரீதியாக மட்டுமன்றி கலை இலக்கிய கலாச்சார ஊடாகவும் நடைபெறுகிறது.
இதன் ஒரு விளைவே புலம்பெயர் நாடுகளில் இந்திய கலைஞர்களை வரவழைப்பதும் அதற்காக பெரும் தொகைப் பணத்தை செலவு செய்வதும் நடைபெறுகிறது.
எமது சொந்த கலை இலக்கிய கலாச்சாரங்கள் வளர்வதற்கு தடையாக இருப்பதுடன் எம்மீதான இந்திய ஆக்கிரமிப்புக்கும் அவை பெரிதும் உதவி புரிகின்றன.
எமது சமூக முன்னேற்றத்திற்கு தேவையான அவசியமான கலை இலக்கிய கலாச்சாரத்தை உருவாக்க வேண்டியது எமது கடமையாகும்.
லண்டனில் உள்ள ஒரு ஈழ தமிழ் முதலாளி தன் குழந்தையின் பிறந்த நாளுக்கு நடிகை திரிசாவையும் வரவழைத்தார்.
தன்னை உயர்தர ஹோட்டலில் தங்கவைத்து நன்கு கவனித்ததாக அந்த நடிகையே பேட்டி கொடுத்திருந்தார்.
இது ஒருவரின் தனிப்பட்ட வியடம் என்று மௌனமாக இருக்க முடியவில்லை. ஏனெனில் இது நடைபெற்ற நாளி;ல்தான் வன்னியில் ஒரு தாய் வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் தன் மூன்று குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொன்றிருந்தார்.
எமது தமிழ் சமூகம் முள்ளிவாய்க்கால் அவலத்திற்குப் பின்பு இப்பதான் ஓரளவு நிமிர்ந்து உட்காருகிறது.
எனவே இன்றைய நிலையில் மற்றைய சமூகங்களைவிட தமிழ் சமூகம் தன்குறித்து இரட்டிப்பு கவனம் கொள்ள வேண்டியுள்ளது.
எனவே பணத்தை வாரியிறைத்து இந்தியாவில் இருந்து கலைஞர்களை வரவழைப்பதை தவிர்ப்போம்.
எமது உள்ளுர் கலைஞர்களுக்கு வாயப்பு கொடுத்து எமக்கான கலை இலக்கியங்களை வளர்ப்போம்.
இந்தியாவின் கலை இலக்கிய கலாச்சார ஆக்கிரமிப்பை முறியடிப்போம்.
No comments:
Post a Comment