•எமக்கு குரல் கொடுததவருக்காக
எம் இனம் திரண்டு எழுந்து நிற்கும்!
எம் இனம் திரண்டு எழுந்து நிற்கும்!
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செய்ய முயன்றமைக்காக திருமுருகன் காந்தி உட்பட நாலு தமிழர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஜனநாயக விரோத காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து ஜ.நா மனிதவுரிமை சபையில் 3 உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதுமட்டுமன்றி நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமார் அவர்களும் இக் கைதிற்கு கண்டனம் தெரிவித்து நாலு தமிழர்களையும் உடன் விடுதலை செய்யுமாறு கோரியுள்ளார்.
இங்கு ஆச்சரியம் தரும் செய்தி யாதெனில் நாளை யாழ்ப்பாணத்தில் திருமுருகன் காந்திக்கு ஆதரவாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கண்டப் பேரணி நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அதன் ராணுவத்திற்கு எதிராக கூட ஆர்ப்பாட்டம் நடத்தலாம். ஆனால் இந்திய அரசுக்கு எதிராக சிறு மூச்சுகூட விடமுடியாது.
யாழ்பாணத்தில் இருக்கும் இந்திய தூதுவர் இந்திய அரசுக்கு எதிரான நிகழ்வுகளை தனது உருட்டல், பிரட்டல் வெருட்டல் மூலம் தடுத்து வருகிறார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகை உதயன். இதன் முதலாளி சரவணபவன். அவர் ஒரு பாராளுமன்ற உறுப்pனரும்கூட. அவரையே இந்திய அமைதிப்படையின் மருத்துவமனைக் கொலைகளை பிரசுரிக்கக்கூடாது என்று மிரட்டியவர் இந்த தூதுவர்.
ஒரு எம்.பி யையே மிரட்டியவர் என்றால் சாதாரண மக்களை எப்படி மிரட்டுவார் என்பதை ஒருகணம் நினைத்து பாருங்கள்.
எனவேதான் இந்த இந்திய தூதரின் மிரட்டல்களுக்கு அஞ்சாது இந்திய அரசுக்கு எதிராக நாளை நடைபெறும் கண்டன பேரணி ஆச்சரியம் தரும் செய்தி என்று குறிப்பிட்டேன்.
தமக்காக குரல் கொடுத்தவரை தமிழ் இனம் ஒருபோதும் கைவிட்டுவிடாது என்பதை நாளை ஈழத் தமிழர் யாழ்ப்பாணத்தில் நிரூபித்து காட்டுவார்கள
No comments:
Post a Comment