•“கூட்டாளி “
இந்திய அரசின் தடைக்கு எதிராக
லண்டன் தமிழர்கள் வழங்கிய அமோக ஆதரவு!
இந்திய அரசின் தடைக்கு எதிராக
லண்டன் தமிழர்கள் வழங்கிய அமோக ஆதரவு!
இந்திய அரசினால் தடைவிதிக்கப்பட்ட ஈழத்து கலைஞன் நிரோஜன் அவர்களின் “கூட்டாளி” படத்திற்கு லண்டன் வாழ் தமிழர்கள் அமோக ஆதரவை வழங்கியுள்ளனர்.
நேற்று லண்டன் வெம்பிளி நகரில் மாலை 5 மணியளவில் “கூட்டாளி” படம் திரையிடப்பட்டது.
அடுத்தடுத்து நிகழும் பயங்கரவாத தாக்குதல்களால் லண்டனே அல்லோலகல்லுப்பட்டுக் கொண்டிருந்த நேரத்திலும் குடும்பமாக வந்து தமது ஆதரவை தமிழ் மக்கள் வழங்கியுள்ளனர்.
ஆம். லண்டன் வாழ் தமிழ் மக்கள் இந்த ஆதரவின் மூலம் இந்திய அரசின் முகத்தில் ஒங்கி குத்தியுள்ளனர்.
இந்திய அரசு தடை செய்தாலும் அதனை ஆதரவு கொடுத்து வளர்த்தெடுக்க தயாராக ஒரு மக்கள் கூட்டம் இந்தியாவுக்கு வெளியே இருக்கின்றது என்ற செய்தி நேற்று தரப்பட்டுள்ளது.
இந்த செய்தி ஈழத்து கலைஞன் நிரோஜனுக்கு மட்டுமன்றி இனி எல்லா தமிழ் கலைஞர்களும் இந்திய அரசுக்கு பயப்படாமல் செயற்பட நிச்சயம் உதவி செய்யும்.
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுதான். அந்தளவில் ஒரு ஈழத்து கலைஞனின் படைப்பு ஈழத் தமிழர்களுக்கு பெருமைதான். அனால் அதற்காக எப்பவும் குழந்தையாகவே இருப்போம் என்று அடம்பிடிக்கக்கூடாது.
“கூட்டாளி” படம் ஈழத்து கலைஞனால் எடுக்கப்பட்ட ஒரு இந்திய சினிமாவாகவே இருக்கிறது. இந்திய சினிமாவுக்குரிய ஆடல் பாடல் சண்டை என்று மசாலாகவே இருக்கிறது.
இனிவரும் காலத்திலாவது ஒரு சர்வதேச தரத்திலான சினிமாவை தருவதற்கு நிரோஜன் முயற்சி செய்ய வேண்டும். அதற்குரிய தகுதியும் திறமையும் அவரிடம் உண்டு.
No comments:
Post a Comment