•ரஜனியின் 2.0 தோல்வியா?
சுப்பர்ஸ்டார் ரஜனியின் "மாஸ்" படம் என்றார்கள்
தமிழன் சங்கரின் 4 வருட உழைப்பு என்றார்கள்
ஈழத்தமிழன் லைக்காவின் 600 கோடி முதலீடு என்றார்கள்
என்ன சொன்னாலும் ஒரு மொக்கைப் படத்தை ஓட்டிவிட முடியுமா?
ஆங்கிலப்படத்திற்கு நிகரான படம் என்றார்கள். கடைசியில பழைய விட்டலாச்சாரியா படம் போல கொடுத்திருக்கிறார்கள்.
இந்த 600 கோடி ரூபாவில் 600 படம் எடுத்திருக்கலாம். குறைந்தது 6000 புதிய கலைஞர்களை உருவாக்கியிருக்கலாம்.
அப்படி செய்திருந்தால் போட்ட பணத்தையும் சம்பாதித்திருக்கலாம். நல்ல பெயரையும் சம்பாதித்திருக்கலாம்.
படத்தின் ஆரம்பத்தில் ஒரு மனிதர் டெலிபோன் டவரில் ஏறி தற்கொலை செய்கிறார். அடுத்து படத்தின் இயக்கம் சங்கர் என்று காட்டுகிறார்கள்.
உண்மையில் இந்தப் படத்தின் மூலம் சங்கர் மட்டு:மல்ல தயாரிப்பாளர் லைக்கா சுபாஸ்கரனும் தற்கொலை செய்துள்ளனர்.
இனியாரும் இப்படி அதிக முதலீட்டில் படம் எடுக்க துணிய மாட்டார்கள்.
அந்தளவில் இப் படத்தின் தோல்வி வரவேற்கப்பட வேண்டியதே!
குறிப்பு- படத்தின் கதை மொபைல்போன் பாவனையால் சிட்டுக்குருவிகள் அழிகின்றன என்பதே. ஆனால் மொபைல்போன் சிம்காட்டை விற்கும் லைக்கா முதலாளி இந்த படத்தை எடுத்திருக்கிறார். முட்டா பய, படத்தின் கதை என்னவென்று ஆரம்பத்திலேயே சங்கரிடம் கேட்டிருக்க வேண்டாமா?
No comments:
Post a Comment