•அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும்
இலங்கை முன்னாள் ஜனாதிபதியும்
இலங்கை முன்னாள் ஜனாதிபதியும்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்தவர்.
அவர் அண்மையில் கிறிஸ்மஸ் தாத்தா வேடம் அணிந்து குழந்தைகளை மகிழ்வூட்டியுள்ளார்.
இலங்கையில் இரண்டுமுறை ஜனாதிபதியாக இருந்தவர் மகிந்த ராஜபக்ச. சட்டத்தை மாற்றி 3வது முறையாக போட்டியிட்டார். ஆனால் மக்களால் நிராகரிக்கப்பட்டார்.
ஆனாலும் பதவி ஆசை அவரை விடவில்லை. குறுக்கு வழியில் மைத்திரி மூலம் பிரதமரானார்.
இவரது நியமனம் சட்ட ரீதியற்றது என்று நீதிமன்றம் கூறியதால் அப் பதவியும் இழந்தார்.
அப்புறம்கூட அவரது பதவி வெறி தீரவில்லை. மீண்டும் மைத்திரி மூலம் எதிர்கட்சி தலைவர் பதவியை பெற்றுள்ளார்.
இந்த பதவியும்கூட இவர் அனுபவிக்க முடியாது என்கிறார்கள். அப்படியென்றால் அடுத்து என்ன பதவிக்கு தாவப் போகிறார்?
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி போல் கௌரவமாக மகிந்தவும் ஒதுங்கி இருந்திருக்கலாம்.
அவரது பதவி வெறியினால் முதலில் முன்னாள் ஜனாதிபதி ஆனார். அடுத்து முன்னாள் பிரதமர் ஆனார். இப்போது முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ஆகப் போகிறார் என்கிறார்கள்.
இந்த கேவலம் எல்லாம் மகிந்தவுக்கு தேவைதானா?
No comments:
Post a Comment