•குசு
கிண்டலுக்கும் சிரிப்புக்கும் உரிய விடயமா?
கிண்டலுக்கும் சிரிப்புக்கும் உரிய விடயமா?
விஐய் டிவியில சுப்பர் சிங்கர் ஜீனியர் நிகழ்வில் அறிவிப்பாளர் பிரியங்கா குசு விடுவதாக அடிக்கடி காட்டுகிறார்கள்.
இதை ஒரு நகைச்சுவையாக சிரிப்புக்குரிய விடயமாக அடிக்கடி காட்டுகிறார்கள். சிரிப்பு வரவில்லை. எரிச்சல்தான் வருகிறது.
முன்பு இப்படித்தான் மனநோயாளிகளை “பையித்தியம்” “மெண்டல்” என்று டிவி களிலும் சினிமாப் படங்களிலும் நகைச்சுவையாக கிண்டல் பண்ணி வந்தார்கள்.
ஆனால் இப்போது அவ்வாறு கூறுவது தவறு என புரிந்து தவிர்த்து வருகின்றனர். அதுபோல் இந்த குசுவையும் நகைச் சுவையாக காட்டுவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு காட்டுவது சிறுவர்கள் மத்தியில் தவறான புரிதலை எற்படுத்திவிடும்.
எனவே தயவு செய்து சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு இதனை யாராவது கொண்டு செல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment