•பை (BYE ) பை (BYE) மகிந்த மாத்தையா!
மகிந்த குறுக்கு வழியில் வந்ததால் குறுகிய நாட்களில் பதவியை விட்டு வெளியேற வேண்டி வந்துள்ளது.
ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மகிந்த போனதற்காக வருத்தப்படவோ அல்லது ரணில் வந்துவிட்டார் என்று மகிழ்ச்சி அடையவோ முடியாது.
ஏனெனில் இரண்டு பேருமே தமிழ் மக்களுக்கு எந்த உரிமையும் தரப் போவதில்லை.
சம்பந்தர் அய்யா பொறுத்தவரையில் மகிந்த ராஜபக்ச என்னும் பிசாசைவிட ரணில் என்னும் பேய் பரவாயில்லை என்று தெரிவு செய்திருக்கிறார்.
இங்கு கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் தமிழர் தரப்பு யாராக இருந்தாலும் எப்போதும் பேய் அல்லது பிசாசு என்றுதான் தெரிவு செய்ய வேண்டிய நிலை இருக்கிறது.
நேற்று அமிர்தலிங்கத்திற்கும் இந்த நிலைதான் இருந்தது. இன்று சம்பந்தர் அய்யாவுக்கும் இந்த நிலைதான் இருக்கிறது. நாளை ஒருவேளை கஜேந்திரகுமார் வந்தாலும் இந்த நிலையைத்தான் சந்திக்க வேண்டி இருக்கும்.
சிங்கள ஆளும்வர்க்க கட்சிகளைப் பொறுத்தவரையில் ஒரு கட்சி தமிழ் மக்களுக்கு உரிமை தர முன்வந்தால் இன்னொரு கட்சி எதிர்க்கும்.
அந்த இன்னொரு கட்சியின் எதிர்ப்பை காரணம்காட்டி ஆளும் கட்சி உரிமை தராமல் இருக்கும்.
நடிகர்கள் மாறினாலும் இதே நாடகக்காட்சிகள்தான் சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து அரங்கேறி வருகிறது.
தேர்தல் பாதை மூலம் தமிழ் மக்களுக்கு எந்த உரிமையும் கிடைத்து விடாது என்பதையே ஒவ்வொரு நிகழ்வுகளும் நிரூபிக்கின்றன.
இங்கு நாம் உணர வேண்டியது பிரச்சனை சம்பந்தர் அய்யாவிலோ அல்லது சுமந்திரனிலோ அல்ல. மாறாக அவர்கள் முன்னெடுத்த தேர்தல் பாதையில் என்பதையே.
No comments:
Post a Comment