•போதும். இனியாவது அகதி வாழ்வுக்கு முடிவு கட்டுங்கள்!
தமிழ்நாட்டில் தற்போது சுமார் ஒரு லட்சம் ஈழ அகதிகள் இருக்கின்றனர். இவர்கள் கடந்த 35 வருடங்களாக அகதிகளாகவே இருக்கின்றனர்.
ஜரோப்பா மற்றும் கனடா அவுஸ்ரேலியா நாடுகளுக்கு சென்ற ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு அவர்கள் கல்வி கற்க வேலை செய்ய என அனைத்து வசதிகளும் உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால் இந்தியாவில் உள்ள ஈழ அகதிகளுக்கு மட்டும் உயர் கல்வி கற்கும் வாய்ப்புகூட மறுக்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள தீபெத் மற்றும் அகதிகள் எல்லாம் சுதந்திரமாக திரிய அனுமதித்த இந்தியஅரசு ஈழ அகதிகளை மட்டும் கைதிகள் போல் நடத்துகின்றது.
இதுபோதாதென்று பாவானிசாகரில் கம்யுனிஸ் கட்சி தலைவர் ஒருவர் ஈழ அகதிகளை வெளியேற்ற வேண்டும் அல்லது அடைத்து வைக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
கடந்த 35 வருடமாக மௌனமாக இருந்த தலைவர் அதுவும் கம்யுனிஸ்ட் தலைவர் இப்போது அகதிகளுக்கு எதிராக வன்மத்தை கக்கியுள்ளது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தருகிறது.
அதேவேளை தம்மை தரக்குறைவாக ஏசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி பவாணிசாகர் அகதிமுகாமில் இருக்கும் அகதிகள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர் வடநாட்டில் இருந்து தமிழ்நாட்டக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
ஏற்கனவே லட்சக்கணக்கான மலையாளிகள் , கன்னடர், தெலுங்கர்கள் தமிழகத்தில் வாழுகின்றனர்.
இவர்களுக்கு எதிராக குரல் கொடுக்காத கம்யுனிஸ்ட் தலைவர் ஈழ அகதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பது ஏன்?
இவர்களால் பறிபோகாத தமிழக வளம் ஈழ அகதிகளால் பறிபோவதாக காட்டுவதன் மர்மம் என்ன?
போதும். இந்த நிலை தமிழகம் முழுவதும் பரவுவதற்கு முன்னரே முடிவு காண வேண்டும்.
தமிழகத்தில் தொடர்ந்து வாழ விரும்பும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குங்கள். தாயகம் திரும்ப விரும்புவோரை உடனே அனுப்பி வையுங்கள்.
மாறாக உருவாகிவரும் ஈழத் தமிழர் மற்றும் தமிழக தமிழர்களின் ஒற்றுமையை குழப்புவதற்காக அகதிகள் மீது தமிழக தமிழர்களை தூண்டிவிட வேண்டாம்.
No comments:
Post a Comment