தேர்தல் முடிவும் ஈழத் தமிழர் மத்தியில் எழும் கேள்வியும்
இந்தியாவில் ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
மோடியின் பாஜக கட்சி படுதோல்வியை தழுவியுள்ளது.
அதன் கோட்டை என கருதப்படும் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்திலும் தோல்வியை சந்தித்துள்ளது.
மீண்டும் மோடியே பிரதமராவர் என்ற பாஜக வினரின் நம்பிக்கை சிதறடிக்கப்பட்டுள்ளது
அதேவேளை இரு மாநிலங்களில் இந்திக் கட்சிகளான பாஜகவோ அல்லது காங்கிரசோ வெற்றி பெறவில்லை.
மாறாக அம்மாநில பிராந்திய கட்சிகளே வெற்றி பெற்றுள்ளன. மாநிலங்களில் பிராந்திய கட்சிகள் வெற்றி பெறுவது வரவேற்கப்பட வேண்டியதே.
ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் வந்தாலும் சரி பாஜக வந்தாலும் சரி இரண்டும் ஒன்றுதான். யாருமே உதவப் போவதில்லை.
ஆனால் இப்போது இங்கு எழும் முக்கிய கேள்வி என்னவெனில் மோடியே தொடர்ந்து பிரதமராவார் என நம்பி “இந்து தமிழீழம்” கேட்ட காசி ஆனந்தன் ஐயா இனி என்ன செய்யப்போகிறார்?
குறிப்பாக ஈழத்தில் சிவசேனை ஆரம்பித்த மறவன்புலவு சச்சிதானந்தன் இனி என்ன செய்யப் போகிறார்?
No comments:
Post a Comment