முதலில் சிங்கள அரசை நல்லாட்சி என்றனர்.
இப்போது சிங்கள ராணுவத்தை நல்லது என்றும் அது வெள்ளத்தில் மக்களை காப்பாற்றியதன் மூலம் நட்புறவு கரம் நீட்டுவதாகவும் கூறுகிறார்கள்.
அதாவது ராணுவத்தை தமிழர்கள் வெறுக்க வேண்டியதில்லை. அவர்கள் உதவுவதை பார்க்கும்படி கூறுகிறார்கள்.
இப்படித்தான் முள்ளிவாய்க்காலில் ராணுவம் இனப்படுகொலை செய்ததை கூறியபோது ராணுவம் பிஸ்கட்டும் தண்ணீரும் தந்ததை மறந்து பேச வேண்டாம் என்றார்கள்.
அடே! ராணுவம் நல்லது என்றால் சிங்களவன்கூட நம்பமாட்டான்டா.
ஏனென்றால் இதே ராணுவம்தான்டா 1989ல் 60 ஆயிரம் சிங்கள இளைஞர்களை கொன்றது.
ஏனென்றால் இதே ராணுவம்தான்டா 1989ல் 60 ஆயிரம் சிங்கள இளைஞர்களை கொன்றது.
அது தமிழ் இசைப்பிரியாவை மட்டுமல்ல சிங்கள மன்னம்பேரியையும் பாலியல் வல்லுறவு செய்து கொன்றது என்பதை நினைவில் கொள்ளுங்கடா.
ராணுவம் எப்போதும் அரசின் வன்முறைக் கருவியே. அதன் கையில் துப்பாக்கி இருக்கும்வரை அது ஒருபோதும் புத்தனாக இருக்க முடியாது.
No comments:
Post a Comment