•மறப்பது மக்கள் வழமை
நினைவூட்ட வேண்டியது எமது கடமை!
நினைவூட்ட வேண்டியது எமது கடமை!
படத்தில் உள்ள வயோதிபரை நினைவிருக்கிறதா?
இவர் பரிதாபத்திற்குரிய “போராளி” டேவிட் அய்யா!
இவர் தமிழகத்தில் இருந்தபோது கூறியது,
“துரோகமும் வஞ்சகமும் சூதுமான அரசியற்களம் தமிழகத்தினுடையது. பல நேரங்களில் இங்கு வாழ்வதைவிட சிங்களவன் கையால் குண்டடிபட்டு செத்துப் போயிருக்கலாமோ என்று எனக்கு தோன்றுகிறது” – டேவிட் அய்யா
“துரோகமும் வஞ்சகமும் சூதுமான அரசியற்களம் தமிழகத்தினுடையது. பல நேரங்களில் இங்கு வாழ்வதைவிட சிங்களவன் கையால் குண்டடிபட்டு செத்துப் போயிருக்கலாமோ என்று எனக்கு தோன்றுகிறது” – டேவிட் அய்யா
ஈழத்தில் காந்தீயத்தை வளர்த்தவர். அதனால் இலங்கை அரசு அவரை சிறையில் அடைத்து சித்திரவதை செய்தது.
1983ல் காந்தி தேசமான இந்தியாவை நம்பி அகதியாக சென்றார்.
ஆனால் காந்தி சேதத்தின் காவல்துறை அவரை 90 வயதிலும் அபாயகரமானவர் பட்டியலில் வைத்து துன்புறுத்தியது.
ஈழத்தை சொல்லி அரசியற் பிழைப்பு நடத்துவோர் பலர் சொகுசாக வாழ்கையில் தமிழ் மக்களின் விடுதலைக்காக தனது முழு வாழ்வையும் அர்ப்பணித்தவர், 6 மாதத்திற்கு ஒரு முறை தனது அனுமதியை புதுப்பிப்பதற்காக பொலிஸ் நிலைய வாசலில் காத்து நின்றார்.
திருகோணமலையில் கட்டிட கலைக்காக ஒரு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்பது அவரது கனவு. ஆனால் அந்த கனவு நிறைவேறாமலே கிளிநொச்சியில் இரு வருடங்களுக்கு முன்னர் அனாதை ஆச்சிரமத்தில் மரணமானார்.
நமது சம்பந்தர் அய்யா திருகோணமலையில் கட்டினார். டேவிட் அய்யாவின் விருப்பப்படி பல்கலைக்கழகம் கட்டியிருப்பார் என்று நீங்கள் நினைக்கக்கூடும்.
ஆனால் எமது சம்பந்தர் அய்யா கட்டியது பத்திரகாளிக்கு ஒரு கோயில். அதுவும் தன் சொந்தக் காசில் கட்டவில்லை. அரசிடமிருந்து பணம் பெற்று கட்டினார்.
அதனால்தான் எமது கனடாவாழ் மக்கள் சம்பந்தர் அய்யாவுக்கு “வாழ்நாள் வீரர்” பட்டம் கொடுத்தார்கள். டேவிட் அய்யாவை மறந்து விட்டார்கள்.
No comments:
Post a Comment