இந்தியா ஜனநாயக நாடு என்கிறார்கள்
இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள்
ஆனால் தமிழக ஆளுநர் மட்டும் தான் அப்பாற்பட்டவர் என்று நினைக்கிறார்.
எழுவர் விடுதலை குறித்து தமிழக அரசு தீர்மானம் அனுப்பி 100 நாட்களுக்கு மேலாகிவிட்டது
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஏன் தாமதம் என்று கேட்டு 48 நாட்களை தாண்டிவிட்டது.
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டால் 48 மணி நேரத்திற்குள் பதில் தரவேண்டும் என்கிறார்கள்.
ஆனால் தமிழக ஆளுநர் எதற்குமே பதில் அளிக்காமல் இருக்கிறார்.
இந்த சட்டம். நியாயம் நீதிமன்றம் எல்லாம் மதிக்க வேண்டும் என்று மக்களுக்கு போதிப்பவர்கள் தாங்கள் அதனை மதிப்பதில்லை.
இதில் கொடுமை என்னவென்றால் தமிழக ஆளுநரிடம் ஏன் தாமதம் என்று கேட்க வேண்டிய தமிழக அரசு ஆளுநரிடம் கேட்க செல்லும் மக்களின் மோட்டார் சயிக்கிள் பேரணியை தடை செய்கிறது.
அப்படியென்றால் தமிழக அரசும் எழுவர் விடுதலையை வேண்டுமென்றே தாமதம் செய்கிறதா?
ஒன்றில் விடுதலை செய்ய வேண்டும். இல்லையேல் விடுதலை செய்ய முடியாது என்று சொல்ல வேண்டும்.
அதைவிடுத்து எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தால் என்ன அர்த்தம்?
ஏற்கனவே 27 வருடம் அவர்கள் கழித்து விட்டார்கள். இன்னும் எத்தனை வருடம் அனுபவிக்க வேண்டும் என இவர்கள் நினைக்கிறார்கள்?
தமிழன் இளிச்சவாயன் என்று இவர்கள் நினைக்கிறார்களா?
வெகுவிரைவில் இந்திய அரசு இதன் விளைவை அனுபவிக்கும்!
No comments:
Post a Comment