Thursday, December 27, 2018

இயேசு அவதரித்தார்

இயேசு அவதரித்தார்
இம்முறை அவர் ஈழத் தமிழனாக பிறந்தார்
ஈழத்தில் மகிந்த ராஜபக்ச தமிழர்களை கொன்று புதைப்பதைக் கண்ட அவர் தன்னையும் புதைத்தால் பக்தர்கள் நம்புவதுபோல் மூன்றாம் நாள் உயிர்த்தெழ முடியாதே என்று நினைத்தார்.
அதனால் தமிழ்நாட்டுக்கு அகதியாக தப்பிச் சென்றார்.
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு தன்னையும் வாழ வைக்கும் என்று நம்பினார்
ஆனால் தமிழ்நாடு கியூ பிராஞ் பொலிஸ் அவரை பிடித்து சிறப்புமுகாமில் அடைத்தது.
மிகப் பெரிய புலிப் பயங்கரவாதியை கைது செய்திருப்பதாக அடுத்த நாள் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன.
சிறையைவிடக் கொடிய சித்திரவதை முகாமில் இயேசு பிரான் துன்பங்களை அனுபவித்தார்.
கடந்தமுறை அனுபவித்த வேதனைகள் சிலுவையில் அறைதல் போன்றன பரவாயில்லை என்று உணர்ந்தார்.
இதனால் தந்தையே என்னைக் காப்பாற்றும் என்று போப்பாண்டவருக்கு கடிதம் எழுதினார்.
போப்பாண்டவரும் உடனே பதில் எழுதினார் “ இயேசுவாவது, திரும்பி வருவவாவது? பகிடி விடாமல் ஒரு நல்ல டாக்டரிடம் மனநோய்க்கு சிகிச்சை பெறவும்” என்று எழுதியிருதார்.
இயேசுவானாலும் சிறப்புமுகாமில் விடுதலை கிடைக்காது என்பதை அவர் புரிந்துகொண்டார்.
வானில் தேவதைகள் தோன்றின. அவை ஆண்டவரிடம் இந்த உலகிற்கு என்ன சொல்ல விரும்பகிறீர்கள் என கேட்டன.
அதற்கு இயேசு “ ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டாதே. திருப்பி அடி” என்றார்.
குறிப்பு- சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி அகதிகளின் விடுதலைக்கு இனியாவது ஒரு வழி பிறக்குமா?

No comments:

Post a Comment