•தோழர் ஸ்டாலின் மீதான அவதூறுகள் பற்றி
தோழர் ஸ்டாலின் மறைந்து சுமார் 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும்கூட அவர் மீது இந்த முதலாளித்துவம் அவதூறுகளை பரப்பி வருகின்றது.
கிட்லரின் நண்பரான அமெரிக்கப் பத்திரிகை முதலாளி ரடால்ப் கெர்ஸ்ட் குடும்பத்திற்குச் சொந்தமான நியூயார்க் மார்னிங் போஸ்ட் 24 வார இதழ்கள் 12 வானொலி நிலையங்கள் ஆகிய அனைத்தின் மூலமும் 1930 முதலே தொடங்கி விட்டது
இந்த ஸ்டாலின் எதிர்ப்பு பிரச்சாரம்.
இந்த ஸ்டாலின் எதிர்ப்பு பிரச்சாரம்.
ஹிட்லரின் வலதுகரமான கோயரிங்கின் கட்டுரைகளைப் பிரசுரிக்குமளவிற்கு வெளிப்படையான நாஜி ஆதரவாளன் கெர்ஸ்ட். கனடா நாட்டுப் பத்திரிகையாளர் டக்ளஸ் டோட்டில் எழுதிய நூல் இவையனைத்தையும் அம்பலமாக்கிறது.
இன்னொரு ஸடாலின் எதிப்பாளரான ராபர்ட் கான்குவெஸ்ட் பிரிட்டிஸ் உளவு நிறுவனமான எம்-15 இன் கையாள் என்பதையும் நிரூபிக்கின்றார் டோட்டில். ஸ்டாலின் காலத்தில் லட்சக்கணக்கானோர் படுகொலை பட்டினிச்சாவு என்பதெல்லாம் கான்குவெஸ்ட் உருவாக்கிய புனைகதைகள்.
1943 இல் கிட்லர் ஆக்கிரரமிப்புக்கு எதிராக ரசியா போராடிக் கொண்டிருந்தபோது “விலங்குப் பண்ணை” என்ற நாவல் மூலம் கம்யூனிசத்தை அவதூறு செய்த ஜார்ஜ் ஆர்வெல், கவிஞர் ஸ்டீபன் ஸ்பென்டர், “பகலில் இருள”; என்ற ஸ்டாலின் எதிர்ப்பு நூல் எழுதிய கீஸ்லர், பிரபல அறிஞர் ரஸ்ஸல் ஆகிய அனைவரும் கம்யு~னிச எதிர்ப்புப் பிரச்சாரத்திற்காக பிரிட்டிஸ் உளவு நிறுவனத்திடமிருந்து காசு வாங்கியிருக்கிறார்கள். இந்த உண்மை 1996 இல் பிரிட்டனில் வெளியாகி சந்தி சிரித்தது.
வெளிநாட்டவர்கள் இருக்கட்டும். ரசிய எழுத்தாளரும் நோபல் பரிசு பெற்றவருமான சோல் ஜெனிட்சின்னே ஸ்டாலின் ஆட்சியைப் பற்றி சொல்லவில்லையா என்று வாதிடலாம். அவருக்கு நோபல் பரிசு கிடைக்கக் காரணமே ஸ்டாலினையும் கம்யூனிசத்தையும் அவதூறு செய்து எழுதியதுதான்.
வியட்நாமில் இருந்து அமெரிக்கா விரட்டப்பட்ட பின்னரும் “மறுபடியும் வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுக்க வேண்டும்” என்று அறை கூவல் விட்டவர் இந்த சோல்ஜெனிட்சின். அவருடைய யோக்கியதைக்கு இதற்கு மேல் சான்று தேவையா?
பழைய ரசிய கம்யுனிஸ்ட் அரசின் ஆவணக் காப்பகங்களைத் திறந்தால் பல திகிலூட்டும் உண்மைகள் வெளிவரும் என அமெரிக்க முதலாளித்துவத்தின் கூலி எழுத்தாளர்கள் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தார்கள்.
ஜெம்ஸ்கோல் டௌஜின் எழவன்ஜீக் என்ற ரசிய வரலாற்று ஆசிரியர்கள் ரசியக் கம்யுனிஸ்ட் கட்சியின் ஆவணக் காப்பக ஆதாரங்களை ஆராய்ந்து 1990 முதல் ஆய்வுக் கட்டுரைகள் பல எழுதினார்கள்.
ஸ்டாலின் ஆட்சிக் காலம் பற்றி கூறப்பட்டவையலெ;லாம் புளுகு மூட்டைகள் என்பதையே இவை நிரூபித்தன. ஆனால் இவை முதலாளித்துவ நாட்டுப் பத்திரிகைகளால் இருட்டடிப்புச் செய்யப்பட்டன.
மிச்சமிருப்பவை அமெரிக்கப் பொய்கள் மட்டும்தான். இதைப் புரிந்து கொள்ள அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. இன்று ஈராக் நாட்டில் நடப்பதைப் பார்த்தால் போதும்.
பேரழிவு ஆயுதங்களை சதாம் வைத்திருப்பதாகச் சொல்லி பல லட்சம் ஈராக் மக்களைக் கொன்று குவித்தது அமெரிக்கா. ஆனால் இப்போது பேரழிவு ஆயுதங்கள் எதுவும் இல்லை என்பதை அமெரிக்க அரசே ஒப்புக்கொண்டுள்ளது.
ஒரு சதாமை வீழ்த்தவே இவ்வளவு புளுகு! தன்னுடைய முதலாளித்துவ சாம்ராஜ்ஜியத்தையே ஆட்டம் காணச்செய்த ஸ்டாலினுக்கும் கம்யுனிசத்திற்கும் எதிராக எவ்வளவு புளுகியிருப்பார்கள் என்பதை சிறிது கற்பனை செய்து பாருங்கள்?
லெனினுடைய மறைவுக்குப் பின் உலகின் முதல் சோசலிச நாட்டை உருவாக்கிக் காட்டிய தோழர் ஸ்டாலின் பணி மகத்தானது. ஸ்டாலின் தலைமையிலான ரசியாவிற்கு நேரில் சென்று வந்த தாகூர் இவ்வாறு பாராட்டியிருக்கின்றார்.
கலைவாணர் என்.எஸ்.கே இரும்புத்திரை நாடு என்று ரசியாவை சித்தரித்த முதலாளிகளின் பொய்ப்பிரச்சாரத்தை கேலி செய்து கட்டுரை எழுதியிருக்கின்றார்.
ரசியாவின் சிறைகள் உள்ளிட்ட எல்லா இடங்களுக்கும் சுதந்திரமாகச் சென்று பார்த்த தந்தை பெரியார் “இதுதான் உண்மையான மனிதர்கள் வாழும் நாடு” என்று பாராட்டியிருக்கின்றார்.
இத்தனைக்கு பிறகும் தோழர் ஸ்டாலின் மீது அவதூறு பொழிபவர்களை என்னவென்று அழைப்பது?
ஆயிரம் கைகளால் ஆதவன் வருகையை தடுக்க முடியுமா?
அவதூறுகள் மூலம் தோழர் ஸ்டாலின் புகழை அழிக்க முடியுமா?
முடியாது. முடியாது. ஒருபோதும் முடியாது.
No comments:
Post a Comment