Thursday, December 27, 2018

சீக்கியர்களின் உணர்வு ஈழத் தமிழர்களுக்கு வருமா?

•சீக்கியர்களின் உணர்வு
ஈழத் தமிழர்களுக்கு வருமா?
கடந்தவாரம் லண்டனில் உள்ள தமது குருத்துவாரா கோயிலுக்கு வந்த இந்திய தூதுவரை சீக்கிய மக்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்.
தம்மை கொன்ற இந்திய அரசின் பிரதிநிதியாக யார் வந்தாலும் எமது கோயிலுக்குள் அனுமதிக்கமாட்டோம் என திருப்பி அனுப்பியுள்ளனர்.
ஆனால் எம்மவர்களோ யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரை அனைத்து விழாக்களுக்கும் வலிந்து அழைக்கின்றனர்.
சாமத்திய சடங்காக இருந்தாலும் இந்திய தூதர் வந்து தண்ணி வார்க்க |வேண்டும் என்று எம்முடைய சிலர் அடம் பிடிக்கின்றனர்.
நாட்டிய அரங்கேற்றம்கூட இந்த ரத்தம் தோய்ந்த இந்திய தூதரின் கரங்களால் நிகழ வேண்டும் என்று விரும்புகின்றனர்.
அதுவும் எம்முடைய தலைவர்களோ தூதரின் அழைப்பு வந்தால் வடையும் ரீயும் கிடைக்கும் என்று நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு ஓடுகின்றனர்.
மது, மாதுக்கு அடிமையானவர்களை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் கேவலம் ஒரு ரீக்கும் வடைக்கும் ஓடும் தலைவர்களை இப்பதான் யாழ்ப்பாணத்தில் காண்கிறோம்.
உண்மையில் இதை எழுத வெட்கமாகவே இருக்கிறது. உலக சனத்தொகையில் தமிழரைவிட சீக்கியர்களின் எண்ணிக்கை குறைவு.
ஆனாலும் அவர்கள் இந்திய அரசை துணிந்து எதிர்த்து நிற்கின்றனர்.
ஆனால் தமிழர்களோ இத்தனை அழிவிற்கு பிறகும்கூட இத்தனை அழிவிற்கும் காரணமான இந்திய அரசை நம்புகிறார்களே?
இந்த அவலத்தை எங்கே போய் சொல்லுவது?

No comments:

Post a Comment