•சிறீதரன் முகத்தில் ஓங்கி குத்தியிருக்கும் யாழ் மாணவர்கள்
யாழ் குடாநாட்டிற்கு குடிதண்ணீர் தரமுடியாது என்று ஆர்ப்பாட்டம் செய்தவர் கிளிநொச்சி பாராளமன்ற உறுப்பினர் சிறீதரன்.
ஆனால் இன்று கிளிநொச்சி தண்ணீரால் மூழ்கியுள்ள நிலையில் உடன் கை கொடுத்தக்கொண்டிருப்பவர்கள் அதே யாழ்குடா மக்களே.
சிறீதரன் தன் பிள்ளைகளை யாழ்ப்பாணத்தில் தங்கவைத்து யாழ்ப்பாணத்து பாடசாலையில்தான் கல்வி கற்க வைத்துள்ளார்.
இருந்தும்கூட அவர் யாழ் குடாநாட்டிறற்கு இரணைமடுக் குளத்தில் இருந்து குடி தண்ணீர் தர மறுத்து வருகிறார்.
உலகவங்கி இக் குடி தண்ணீர் திட்டத்திற்குரிய முழு நிதியையும் தர முன்வந்தும் சிறீதரனின் குறுகிய அரசியலால் அத் திட்டம் நிறைவேறாமல் உள்ளது.
அவர் தன் பதவி அரசியலுக்காக யாழ் குடாநாட்டு மக்களுக்கு எதிராக கிளிநொச்சி விவசாயிகளை தூண்டிவிட்டு வருகிறார்.
மனிதாபிமானரீதியாக யாரும் குடி தண்ணீருக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால் சிறீதரனுக்கு அந்த மனிதாபினம்கூட ஏற்படவில்லை.
சிறீதரனுக்கு கொஞ்சமாவது தமிழ்இன உணர்வு இருந்திருக்குமேயானால் யாழ் குடாமக்களுக்கு குடி தண்ணீரை வழங்கிவிட்டு அப்புறம் கிளிநொச்சி விவசாயிகளுக்கு தண்ணீர் போதவில்லை என்று கூறி மதவாச்சியில் இருந்து மாவலி நீரை கொண்டு வந்திருக்க முடியும்.
அவ்வாறு செய்திருந்தால் யாழ் குடாமக்களுக்கு குடி தண்ணீரும் கிளிநொச்சி விவசாயிகளுக்கு மூன்று போகத்திற்கும் உரிய தண்ணீரும் கிடைத்திருக்கும். சிறீதரன் பெயரும் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டிருக்கும்.
ஆனாலும் யாழ்குடா மக்கள் சிறீதரன் சூழ்ச்சிக்கு பலியாகவில்லை. நூற்றுக்கணக்கான யாழ் இளைஞர்களை உணவுடன் அனுப்பியுள்ளார்கள்.
உலகெங்கும் இருந்து தமிழ்இன உணர்வுடன் உதவிகள் இரவு பகலாக சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
மாணவர்கள் குறிப்பாக காட்லிககல்லூரி மாணவர்கள் உடனடியாக 130 குடும்பங்களுக்கு உலர் உணவு சேகரித்து அனுப்பியுள்ளனர்.
உண்மையில் யாழ் மாணவர்களும் இளைஞர்களும் மட்டுமல்ல யாழ்குடா நாட்டு மக்கள் இந்த உதவிகள் மூலம் சிறீதரன் முகத்தில் ஓங்கி குத்தியுள்ளனர் என்றே கூற வேண்டும்.
இனியாவது சிறீதரன் தமிழ் இன உணர்வு கொள்வாரா? கொள்ள வேண்டும். இல்லையேல் தூக்கியெறியப்படுவார்.
No comments:
Post a Comment