•யாரடா இந்த ஜபிசி தமிழ்?
இத்தனை நாளும் நிம்மதியாக இருந்தேன்.
நண்பன் ஒருவன் அடிக்கடி போன் செய்து “டாப் றேடியோ வாங்கு. ஜபிசி தமிழ் கேட்கலாம்” என்றான்.
நானும் சரி என்று ஒரு றேடியோவை வாங்கி ஆவலுடன் ஜபிசி தமிழைக் கேட்டேன்
அவனுகள் என்னடாவென்றால்; இயல் இசை நாடகம் என்னும் மூன்று தமிழை அடுத்து தமது ஜபிசி தமிழ் நாலாவது தமிழ் என்கிறான்கள்.
என்னடா இது வம்பாய் கிடக்குது. சரி எதோ ஆர்வக் கோளாறில் கூறுகின்றாங்கள் போலும் என்று தொடர்ந்து கேட்டால்,
தான் இளமையாகவும் அழகாகவும் இருப்பதற்கு காரணம் ஜபிசி தமிழ் தொடர்ந்து கேட்பதே என்று கூறுகின்றாங்கள்.
எனக்கு வந்த ஆத்திரத்திற்கு நண்பனை நாலு கெட்ட வார்த்தையால் திட்டுவம் என்று போன் எடுத்தால்,
“மன்னிக்கவும் சிட்டுக் குருவிகள் செத்து விடும் என்பதால் சிறிது நேரத்திற்கு தொலைபேசியை ஆப் பண்ணி வைத்திருக்கிறேன்” என்று மெசேஜ் அனுப்புகிறான்.
“இருடி நேரில ஒருநாளைக்கு மாட்டுவாய்தானே? அப்ப வைச்சுக்கிறேன் என் கச்சேரியை” என்று நான் பதில் அனுப்பியுள்ளேன்.
No comments:
Post a Comment