•கடிநாய் என்றால் கட்டிப் போடலாம்.
விசர் நாயாக இருந்தால் என்ன செய்வது?
விசர் நாயாக இருந்தால் என்ன செய்வது?
ஒன்றில் விரட்டி அடிக்கலாம் அல்லது நாம் விலத்தி போகலாம்.
சிலருக்கு முகநூலில் எப்படி உரையாடுவதே என்று தெரியவில்லை.
இன்று முகநூலில் உள்ள முக்கிய பிரச்சனை விமர்சனம் செய்வது எப்படி என்பதே.
சிலர் தமது நட்பு சக்திகளை “கிழி கிழி என்று கிழித்து தொங்கவிட்டதாக” பெருமையுடன் எழுதுகின்றனர்.
எதிரியையும் நட்பு சக்திகளையும் எப்படி விமர்சிப்பது என்று தெரியாமலே அப்படி செய்கின்றனர்.
ஆனால் மாபெரும் மார்க்சிய ஆசான் தோழர் மாவோ சேதுங் இது குறித்து எமக்கு தகுந்த வழி காட்டியுள்ளார்.
'எதிரியின் மீதான நம் விமர்சனம் புலி இரையைக் கவ்வுவதைப் போல வேகமாய் இருக்க வேண்டும். நட்பு சக்திகளின் மீதான விமர்சனம் பூனை தன் குட்டியை கவ்வுவதைப் போல மென்மையாய் இருக்க வேண்டும்' என்று அவர் கூறியுள்ளார்.
ஆம். எதிரி மீதான விமர்சனம் அவனை அம்பலப்படுத்துவதாக இருக்க வேண்டும். நண்பன் மீதான விமர்சனம் அவனை எம் பக்கத்திற்கு வென்றெடுப்பதாக இருக்க வேண்டும்.
உணர்ச்சி வேகத்தில் நாம் நட்பு சக்திகளின் குறைகளை வெறுப்பாய் எதிர் கொள்வது எமது இலட்சியமான தமிழின விடுதலைக்கு ஒருபோதும் உதவாது.
நிர்ப்பந்தம் தோலைத்தான் தொடும். ஆனால் அறிவுறுத்தல் ஆத்மாவைத் தொடும்
சமூகத்தில் நிலவும் முரண்பாடுகளை கையாள்வது குறித்து நாம் இதனைக் கவனத்தில் கொள்ளல் வேண்டும்..
எமது உரையாடல்கள் ஆக்கபூர்வமானவையாக இருத்தல் வேண்டும்
No comments:
Post a Comment