•கேரள மேயர்- பெருமை கொள்ள வைக்கிறார்
யாழ் மேயர் - பெருமூச்சு விட வைக்கிறார்
யாழ் மேயர் - பெருமூச்சு விட வைக்கிறார்
கேரளாவில் திருச்சுர் மேயராக இருப்பவர் கம்யுனிஸ்ட் கட்சியை சேர்ந்த அஜிதா .
இவர் மேயராவதற்கு முன்னர் தினமும் காலையில் 200 வீடுகளுக்கு பால் விநியோகம் செய்து வந்தார்.
ஆச்சரியம் என்னவெனில் இவர் மேயராகிய பின்னரும் இப்பவும் காலையில் 200 வீடுகளுக்கு பால் விநியோகம் செய்கிறார்.
இவர் தனது பால் விநியோக தொழிலை தொடர்வது ஆச்சரியம் என்றால் அதைவிட ஆச்சரியம் பதவி ஏற்பதற்கு அரசு வழங்கிய சொகுசு வாகனத்தில் வருவார் என்று எதிர்பார்த்தால் அவரோ தனது சொந்த ஸ்கூட்டர் வண்டியில் வந்திருக்கிறார்.
இவரை மக்கள் “பால்கார மேயரம்மா” என்று அன்புடன் அழைப்பதோடு அவரை மீண்டும் தெரிவு செய்து பதவியில் அமர்த்தியுள்ளனர்.
உண்மையில் மேயர் அஜிதா தன்னை தெரிவுசெய்த மக்களை பெருமை கொள்ள வைக்கிறார்.
ஆனால் எமது யாழ் மேயரை நினைத்தால் நாம் பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு வழியில்லை.
இதோ எமது யாழ் மேயரின் பட்ஜட் கணக்கை கொஞ்சம் படித்து பாருங்கள்,
யாழ்.மாநகர சபை செலவீன மதிப்பீடு 2019.
கடல் கடந்த பயிற்சி செலவு (முதல்வர் , உறுப்பினர்கள் ) 10, 000, 000.00
வாகன எரிபொருள் 12,000,000.00
தொலைத்தொடர்பு மற்றும் படிகள் (முதல்வர் மற்றும் உறுப்பினர்கள்) 10,000,000.00
வருட இறுதி நிகழ்வு 150,000.00
பொதுக்கூட்ட உபசரணை 300,000.00
முதல்வர் உபசரணை 500,000.00
தினக்குறிப்பு புத்தகம் 100,000.00
நினைவு சின்னம் வழங்கல் 100,000.00
உள்ளூரட்சி வாரம் 1,000,000.00
சட்ட ஆலோசகர் கொடுப்பனவு 500,000.00
புகையிரத ஆணைச்சீட்டு 1,500,000.00
நகர மண்டபம் , முதல்வர் வாசஸ்தலம் நிர்மாணிப்பு 125,000,000.00
ஊழியர் கடன் கொடுப்பனவு 100,000,000.00 (கொடுத்த கடன்கள் மீள் வசூலிக்காத நிலையில் புதிய கடன் கொடுப்பனவு)
வாகன எரிபொருள் 12,000,000.00
தொலைத்தொடர்பு மற்றும் படிகள் (முதல்வர் மற்றும் உறுப்பினர்கள்) 10,000,000.00
வருட இறுதி நிகழ்வு 150,000.00
பொதுக்கூட்ட உபசரணை 300,000.00
முதல்வர் உபசரணை 500,000.00
தினக்குறிப்பு புத்தகம் 100,000.00
நினைவு சின்னம் வழங்கல் 100,000.00
உள்ளூரட்சி வாரம் 1,000,000.00
சட்ட ஆலோசகர் கொடுப்பனவு 500,000.00
புகையிரத ஆணைச்சீட்டு 1,500,000.00
நகர மண்டபம் , முதல்வர் வாசஸ்தலம் நிர்மாணிப்பு 125,000,000.00
ஊழியர் கடன் கொடுப்பனவு 100,000,000.00 (கொடுத்த கடன்கள் மீள் வசூலிக்காத நிலையில் புதிய கடன் கொடுப்பனவு)
இந்த பட்ஜட்டில் மக்கள் நலன், அபிவிருத்திக்கு ஒதுக்கிய நிதியை விட ஆடம்பர செலவுக்கு ஒதுக்கிய நிதி கூடுதலாக உள்ளது
என்ன செய்வது? எமக்கு வாய்ச்ச மேயரை நினைத்து பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு வழியில்லை.
No comments:
Post a Comment