•அதிசயம். ஆனால் உண்மை!
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது தவறு என்று 7 நீதிபதிகள் ஒருமித்து தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
முன்னாள் மற்றும் இந்நாள் ஜனாதிபதிகளால் ஒரு நீதிபதியைக்கூட வாங்க முடியவில்லை என்பது நம்பமுடியாத ஆச்சரியமாக இருக்கிறது.
அதுவும் தமிழ் மக்களுக்கு எதிராக தாம் விரும்பியவாறு தீர்ப்பை பெற்ற நீதிமன்றத்தில் இன்று தமக்கு வேண்டிய தீர்ப்பை பெற முடியவில்லை என்பது ஆச்சரியம்தான்.
மகிந்த ராஜபக்சவைப் பொறுத்தவரையில்
•அவர் நம்பிய சோதிடம் கை கொடுக்கவில்லை
•அவர் கைகளில் கட்டிய தாயத்துக் கயிறுகள் கைகொடுக்கவில்லை
•அவர் விகாரை விகாரையாக கும்பிட்டும் பயன் கிடைக்கவில்லை
•அவர் திருப்பதிக்கு போய் கும்பிட்டும் பலன் கிடைக்கவில்லை
ஆனால் இவை எல்லாவற்றையும்விட ஒரு நீதிபதிகூட இவருக்கு சார்பாக தீர்ப்பு வழங்கவில்லை என்பது ஆச்சரியம்தான்.
ஜனாதிபதி தேர்தலில் அவரை மக்கள் தோற்கடித்தார்கள். மக்களின் அந்த தீர்ப்பை அவர் மதித்திருந்தால் இன்று இந்த அவலத்தை சந்தித்திருக்க வேண்டி ஏற்பட்டிருக்காது.
No comments:
Post a Comment