•செப்-12 தியாகிகள் தினம்.
தோழர்கள் அப்பு, பாலன் ஆகியோருக்கு செவ் வணக்கம்!
நக்சல்பாரி புரட்சியாளர்கள் நினைவு நீடூழி வாழ்க!
வசந்தத்தின் இடி முழக்கம் தூரத்தில் கேட்கிறது என்று தோழர் மாவோ சேதுங் அவர்களால் வர்ணிக்கப்பட்ட நக்சல்பாரி எழுச்சியை தமிழகத்தில் தோற்றுவித்த தியாகிகளை நினைவு கூர்வோம்.
நக்சல்பாரி புரட்சித் தோழர்கள் அப்பு மற்றும் பாலன் நினைவுகள் நீடூழி வாழ்க.
புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள். அவர்களில் இருந்து எண்ணற்ற புரட்சியாளர்கள் முளைக்கிறார்கள்.
ஆம், தோழர்கள் அப்பு பாலன் வரிசையில் தோழர்கள் தமிழரசன் புலவர் கலியபெருமாள் என பல புரட்சியாளர்கள் தோன்றினார்கள்.
இனியும் தோன்றிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் புரட்சி என்னும் இலட்சியக் கனவு நிறைவேறும்வரை உருவாகுவார்கள். இது உறுதி.
தோழர்கள் அப்பு, பாலன், தமிழரசன், புலவர் போன்றவர்கள் என்ன சாதி என்ன மதம் என்றெல்லாம் தெரியாது.
ஆனால் அவர்கள் வறிய மக்களுக்காக உழைத்த புரட்சியாளர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
எனவே சாதி மதம் எல்லாம் கடந்து அனைவரும் புரட்சிக்காக ஒன்றுபடுவோம்.
நாம் இழப்பதற்கு எதுவுமில்லை உயிரைத் தவிர.
ஆனால் நாம் வெல்வதற்கு ஒரு உலகம் காத்து இருக்கிறது.
ஆனால் நாம் வெல்வதற்கு ஒரு உலகம் காத்து இருக்கிறது.
இறுதி வெற்றி உறுதி எமக்கு!
புரட்சி ஓங்குக!
No comments:
Post a Comment