•இந்திய ஒருமைப்பாடு கிலோ என்ன விலை?
காவிரி மேலான்மை வாரியத்தை இப்போது அமைக்க முடியாது என மோடி அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுதானா இந்திய ஒருமைப்பாட்டை மோடியின் அரசு கடைப்பிடிக்கும் லட்சணம்?
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமுல் படுத்த முடியாது என கர்நாடக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதுதானா இந்தியாவின் சட்டத்தின் ஆட்சி என்பது?
ஒருமைப்பாடு, சட்டத்தின் ஆட்சி என்பதெல்லாம் தமிழருக்கு மட்டும்தானா? மற்றவர்களுக்கு இல்லையா?
போகிற போக்கைப் பார்த்தால் இந்திய ஒருமைப்பாடு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலை வரும்போல் இருக்கிறது.
தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய தமிழக அரசோ கோமாவில் கிடக்கிறது.
கடந்த 11 நாட்களாக தமிழக முதல்வர் உடல் நலம் தேறி வருகிறார் என்று அறிக்கை கொடுக்கப்படுகிறதேயொழிய அவருக்கு என்ன நோய் என்பது கூட மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை.
எந்தவித பொறுப்பிலும் பதவியிலும் இல்லாத சசிகலா ஆட்சி நடத்துகிறார். யாரும் இதை தவறு என்று சுட்டிக்காட்டக்கூட இதுவரை முன்வரவில்லை.
தன்மீதான உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும்வரை தமிழக முதல்வர் ஜெயா அம்மையார் அப்பலோ மருத்துவமனையை விட்டு வெளியே வரமாட்டார் போல் இருக்கிறது.
பாவம் தமிழக மக்கள்!
No comments:
Post a Comment