•எவன்டா அது விஞ்ஞானி டார்வின்?
நாங்க சம்பந்தர் அய்யா போல பதவிக்காக எம் இனத்தை காட்டிக் கொடுப்பதில்லை
நாங்க சுமந்திரன் போல் நடந்தது இனப்படுகொலை அல்ல , போர்க் குற்றம் என்று பொய் கூறுவதில்லை
நாங்க சரவணபவன் போல் வரி ஏய்ப்பு செய்து 8 கோடி ரூபாவுக்கு சொகுசு வாகனம் இறக்குமதி செய்வதில்லை.
நாங்கள் இந்திய தூதராலயம் வழங்கும் தண்ணிப் பார்ட்டிக்காக நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அலைவதில்லை.
நாங்கள் இந்திய தூதருக்கு பெம்பிளை சப்பளை பண்ணும் மாமா வேலை பண்ணுவதில்லை.
இத்தனை தப்பையும் பண்ணும் மனிதன் எங்கட இனத்தில் இருந்து தோன்றினான் என்று எப்படிடா கூறமுடியும்?
எங்கட இனத்தை கேவலப் படுத்தாதீங்கடா , அசிங்கமாக இருக்கிறது!
குறிப்பு- குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என விஞ்ஞானி டார்வின் தனது கூர்ப்பு விதியில் கூறியுள்ளார். ஆனால் மனிதர்களான சம்பந்தர், சுமந்திரன், சரவணபவன் போன்றவர்களின் துரோக நடவடிக்கைகள் குறித்து குரங்குகள் எழுப்பும் கேள்விகள் நியாயமானவையே. எனவே குரங்குகளின் வேண்டுகோள்படி டார்வின் கூர்ப்பு விதி மீளாய்வு செய்யப்படல் வேண்டும் என இந்த கோர்ட் கருதுகிறது.
No comments:
Post a Comment