•சமூக அக்கறையில் வலைத்தளங்கள் அத்து மீறுகின்றனவா?
அண்மையில் அரபு நாடுகளில் நடைபெற்ற பல்வேறு மக்கள் எழுச்சிகளில் முகநூலே அதிக பங்கு வகித்துள்ளது.
கடந்த தேர்தலில் திமுக வின் தோல்விக்கு முகநூலே முக்கிய காரணம் என அதன் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி முகநூலின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்ட அவர் முகநாலில் தமக்கு ஒரு அக்கவுண்ட் உருவாக்கி அதன் மூலமும் தமது கருத்துகளை பரப்பி வருகிறார்.
இந்நிலையில் நேற்றைய தினம் யாழ்நகரில் குழந்தை ஒன்றை தாக்கிய பெண் விபரம் முகநூலில் வெளியாகி அவர் மீது நடவடிக்கை எடுக்க முகநூல் காரணமாக அமைந்துள்ளது.
இது ஒருவரின் தனிப்பட்ட விடயத்தில் தலையிடுகிறது என்றும் முகநூல் அத்துமீறி செயற்படுகிறது என்றும் சிலர் விமர்சிக்கின்றனர்.
குழந்தைப் பிள்ளையை தாக்குவது சட்டவிரோதமான செயல். அது வீட்டுக்குள் நடந்தாலும் சரி அல்லது வெளியில் நடந்தாலும் அதனை சுட்டிக்காட்டுவது சமூகப் பொறுப்புள்ள ஒருவரின் கடமையாகும்.
ஒரு நாயை தூக்கி வீசிய மருத்துவ மாணவரை முகநூல் மூலம் கண்டு பிடித்து நடவடிக்கை எடுத்தால் அதனைப் பாராட்டுகின்றனர்.
ஆனால் ஒரு குழந்தையை தாக்கியதை முகநூலில் பதிவு செய்தால் அதனை அத்து மீறல் என்கின்றனர்.
வாகனம் விபத்து நடக்கிறது என்பதற்காக புத்தியள்ள யாரும் வாகனம் வேண்டாம் என்று கூறுவதில்லை. மாறாக போக்குவரத்து விதிகளை உருவாக்கி விபத்துகளை தவிர்க்க வேண்டும்
அதேபோன்று இத்தனை காலமும் அடக்கி வைக்கப்பட்டிருந்த ஈழத் தமிழினம் இப்போதூன் சுதந்திரமாக உரையாட ஆரம்பித்துள்ளது.
எனவே ஆக்கபூர்வமான உரையாடலுக்கு சரியான வழிகாட்டல் அமைய வேண்டுமேயொழிய பேசவே வேண்டாம் என தடுக்க முனையக்கூடாது.
ஈழத் தமிழினம் மட்டுமன்றி உலக தமிழினம் தமக்கிடையே ஒற்றுமையாக செயற்பட முகநூலே களம் அமைத்துக் கொடுக்கிறது.
எனவே முகநூல் உரையாடலை தடுப்பவர்கள் தமிழினம் தலை நிமிர்வதை விரும்பாதவர்களாகவே இருக்க முடியும்.
எனவே சமூக அக்கறையில் வலைத் தளங்கள் இன்னும் அதிகமாக ஈடுபட வேண்டும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்குவோம்.
ஆயிரம் பூக்கள் மலரட்டும்
நூறு கருத்துகள் முட்டி மோதட்டும்.
நூறு கருத்துகள் முட்டி மோதட்டும்.
No comments:
Post a Comment