•இந்த பெண் செய்த தவறு என்ன?
பிரபாகரன் போஸ்டர் ஒட்டினார் என்ற குற்றச்சாட்டில் ஜெர்மன் குடியுரிமை கொண்ட தமிழ் பெண் ஒருவர் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்.
உண்மையிலே அவர் ஒட்டினாரா? அவர் ஏன் ஒட்டினார்? அவர் ஏதும் அமைப்பு சார்பானவரா? என்பன எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
ஜெர்மனியில் பிரபாகரன் படம் வைத்திருப்பதோ அல்லது அதனை கொண்டு திரிவதோ சட்டப்படி குற்றம் அல்ல. இலங்கையிலும் பிரபாகரன் படம் வைத்திருப்பது சட்டப்படி குற்றமா என்று நான் அறியவில்லை.
பிரபாகரன் ஒழுக்கமானவர் என்று ராணுவ தளபதி புகழ்ந்து புத்தகம் எழுதி வெளியிட அனுமதிக்கப்படுகிறது.
பிரபாகரன் வீட்டு மண்ணை சிங்கள யாத்திரீகர்கள் பெருமையுடன் எடுத்து செல்ல அனுமதிக்கப்படுகிறது.
இவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் ஒரு ஜெர்மன் தமிழ் பெண்ணை மாத்திரம் எதற்காக கைது செய்து வெளியேற்ற வேண்டும்?
அதுமட்டுமல்ல, பயங்கரவாதி என்று குறிப்பிட்டு இலங்கை அரசால் கொல்லப்பட்ட ஜே.வி.பி தலைவர் விஜேயவீராவுக்கு போஸ்டர் ஒட்ட அரசு அனுமதிக்கிறது.
விஜேயவீராவுக்கு சிலை கட்டவும் அவருக்கு வருடந்தோறும் அஞ்சலி செலுத்தவும் இலங்கை அரசு அனுமதிக்கிறது.
ஆனால் பிரபாகரனுக்கு போஸ்டர் ஒட்டுவதைக்கூட இலங்கை அரசு அனுமதிக்க மறுக்கிறது.
பிரபாகரனுக்கு மட்டுமல்ல கொல்லப்பட்ட தமிழ் போராளிகளை நினைவுகூட தமிழ் மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
இலங்கை அரசின் இந்த சர்வாதிகாரப் போக்கை கண்டிப்பதற்கு பதிலாக சிலர் அந்த பெண்ணை கண்டிக்கின்றனர்.
இன்னும் சிலர் இந்த சம்பவத்தைப் பயன்படுத்தி இன்னொரு போராட்டமே அவசியமற்றது என்று போதிக்க முற்படுகின்றனர்.
இவர்கள் இலங்கை அரசைவிட மோசமானவர்கள்.
No comments:
Post a Comment