Monday, October 10, 2016

•வதந்திக்கு காரணம் தமிழிச்சி அல்ல. ஜெயா அம்மையாரே!

•வதந்திக்கு காரணம் தமிழிச்சி அல்ல. ஜெயா அம்மையாரே!
வுழக்கு போட வேண்டியது தமிழிச்சி மீது அல்ல. ஜெயா அம்மையார் மீதே!
கடந்த ஆறு நாட்களாக தமிழக முதல்வர் பற்றி எதுவும் தெரியவில்லை.
அவரது கட்சி எம்.எல்.ஏ கடலில் படுத்து பிரார்த்தனை செய்கிறார்.
அவரது அமைச்சர்கள் அப்பலோ மருத்துவமனை வாசலில் பிரார்த்தனை செய்கின்றனர்.
அவரது தொண்டர்கள் மண் சோறு சாப்பிடுகின்றனர். காவடி எடுக்கின்றனர்.
ஏதிர்க்கட்சி தலைவர் கலைஞர்கூட ஜெயா அம்மையாரின் வீடியோ வெளியிடப்பட வேண்டும் எனக் கேட்டிருக்கிறார்.
ஜெயா அம்மையாரின் சிகிச்சைக்காக லண்டனில் இருந்து மருத்துவர் குழு வந்திருப்பதாக விகடன் பத்திரிகை தெரிவிக்கிறது.
இந்நிலையில் பிரான்சில் இருக்கும் தமிழிச்சி என்பவர் தனது முகநூல் பக்கத்தில் ஜெயா அம்மையார் இறந்து இரு நாட்கள் ஆகிவிட்டது என சந்தேகம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழிச்சி சந்தேகம் தெரிவித்தது ஆச்சரியம் இல்லை. மாறாக சந்தேகம் வரவில்லையென்றால்தான் ஆச்சரியப்பட முடியும்.
ஒரு பொறுப்புள்ள முதலமைச்சர் தனது நிலை பற்றி ஆறு நாட்களாக மக்களுக்கு எதுவும் தெரிவிக்காமல் இருப்பது தவறு.
முறைப்படி அவர் மீதே தமிழக பொலிசார் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
ஆனால் தமிழக காவல்துறை பிரான்சில் இருக்கும் தமிழிச்சி மீது வழக்கு தாக்கல் செய்துள்ளது.
முதலாவது,
தமிழிச்சி ஊடகம் நடத்தவில்லை. அவர் தனது சொந்த முகநூலில் தன் சொந்த கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது,
அவர் ஜெயா அம்மையார் மரணமடைந்துவிட்டார் என்று தனக்கு வந்த ஒரு தகவலையே தெரியப்படுத்தியுள்ளார். அதுவும் சந்தேகமான தகவல் என்றே குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது,
அவர் இருப்பது பிரான்சில். அந்த நாடு கருத்து சுதந்திரத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் நாடு. அங்கு இப்படியெல்லாம் ஒருவர் மீது வழக்கு தாக்கல் செய்ய முடியாது.
அதனால்தான் தமிழக காவல்துறை தொடர்ந்திருக்கும் வழக்கை சந்திக்க தான் தயார் என்ற தமிழிச்சியும் கூறியுள்ளார்.
இத்தனை காரணங்கள் இருந்தும் தமிழக காவல்துறை எதற்காக தமிழிச்சி மீது வழக்கு தொடர்ந்துள்ளது?
அண்மைக் காலமாக தமிழ் உலகில் முகநூல் மூலம் இந்திய அரசுக்கு எதிரான விழிப்புணர்வ ஏற்பட்டு வருகிறது.
இதனை தடுத்து நிறுத்தவதற்காகவே அச்சுறுத்தும் பாணியில் இந்த வழக்கு போடப்பட்டுள்ளது.
எனவே தமிழ இன உரிமைகளில் அக்கறை கொள்வோர் தமிழக காவல்துறையின் இந்த அராஜகத்திற்க எதிராக குரல் கொடுக்க வேண்டும்.
வதந்திகளுக்கு காரணமான தமிழக முதல்வர் ஜெயா அம்மையார் மீது வழக்கு பதிவு செய்யுமாறு தமிழக காவல்துறையை கோர வேண்டும்.

No comments:

Post a Comment