Monday, October 31, 2016

•எப்படி இவர்களால் வெட்கமின்றி இப்படிநடந்துகொள்ள முடிகிறது?

•எப்படி இவர்களால் வெட்கமின்றி
இப்படிநடந்துகொள்ள முடிகிறது?
பல்கலைக்கழக மாணவர் இருவர் கொல்லபட்டு அவர்கள் சிந்திய ரத்தம் இன்னும் காயவில்லை.
உலகமெங்கும் வாழும் தமிழ் மக்கள் அவ் மாணவர்களுக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.
தமிழ் மக்கள் மட்டுமன்றி முஸ்லிம் மக்கள் சிங்கள மக்கள்கூட இப் படுகொலைகளுக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள்.
யுத்தம் முடிந்து ஏழு வருடமாகிவிட்டது. ஆனால் இன்னமும்,
•சிறையில் உள்ள கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை
•இடம் பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை
•காணாமல் போனோர் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை
அதுமட்டுமன்றி தமிழர் பிரதேசங்களில்,
•திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் நடக்கிறது
•புதிதாக புத்த விகாரைகள் கட்டப்படுகின்றன.
இவை குறித்து தமிழ் தலைவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. இவற்றுக்கு எதிராக போராடும் அக்கறையும் இல்லை.
இவர்களுடைய அக்கறை எல்லாம் தமக்கு கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொகுசு வாகனம் இறக்குமதி செய்வதே.
ஒரு வருடத்தில் தீர்வு பெற்றுத் தருவோம் என்று தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தர் அய்யா தேர்தலில் உறுதி மொழி அளித்தார்.
அதன்படி இந்த வருட இறுதிக்குள்ள தீர்வு நிச்சயம் கிடைக்கும் என்று சம்பந்தர் அய்யாவும் சுமந்திரனும் மாறி மாறி கூறி வந்தனர்.
ஆனால் இனி அடுத்த வருட தீபாவளிக்கு முன்னர் தீர்வு கிடைக்கும் என சம்பந்தர் அய்யா பல்டி அடித்துள்ளார்.
வாக்குறுதியளித்தபடி இந்த வருட இறுதிக்குள் தீர்வு பெற்று தர வேண்டும். இல்லையேல் பாராளுமன்ற எம்.பி பதவியை சம்பந்தர் அய்யா துறக்க வேண்டும்.
ஆனால் சம்பந்தர் அய்யா அந்தளவுக்கு நேர்மையான ஒரு மனிதராக இருக்க மாட்டார். ஏனெனில் தமிழ் மக்கள் செத்தவீடு கொண்டாடுகிறார்கள். ஆனால் அவரோ ஜனாதிபதியுடன் தீபாவளி கொண்டாடுகிறார்.
இன்னொரு எம்.பி சரவணபவன் ஜனாதிபதியை அழைத்து தன் மகளுக்கு பிறந்தநாள் கொண்டாடுகிறார். இவர்தான் வரி ஏய்ப்பு செய்து 8 கோடி ரூபாவுக்கு சொகுசு வாகனம் இறக்குமதி செய்தவர்.
வோட்டு போட்ட தமிழ் மக்கள் துன்பத்தில் இருக்க
எப்படி சம்பந்தர் அய்யாவினால் ஜனாதிபதியுடன் தீபாவளி கொண்டா முடிகிறது?
எப்படி சரவணபவன் எம்.பி யால் ஜனாதிபதியை அழைத்து மகளுக்கு பிறந்தநாள் கொண்டாட முடிகிறது?
கொஞ்சம்கூட இவர்களுக்கு வெட்கம் இல்லையா?
கொஞ்சம்கூட இவர்களுக்கு கூசவில்லையா?

No comments:

Post a Comment