•எது உண்மை?
இலங்கையில் யாவரும் அச்சமின்றி வாழும் சூழ்நிலை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார்.
ஆனால் தன்னைக் கொல்ல சதி நடப்பதாகவும் அதனால் தனது உயிருக்க ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் கூறுகிறார்.
இங்கு எமக்கு ஏற்படும் குழப்பம் என்னவெனில் பொறுப்புள்ள பிரதமர் கூறுவதை நம்புவதா அல்லது மாகாண முதல்வர் கூறுவதை நம்புவதா?
வடமாகாண முதல்வர் முன்னாள் நீதியரசர். அவர் இரண்டாம்தர அரசியல்வாதிகள் போல் பொறுப்பற்ற முறையில் கூறமாட்டார் என நம்புகிறோம்.
ஆனால் ஆச்சரியம் என்னவெனில் வடமாகாண முதல்வர் தனது உயிருக்கு ஆபத்து என்று கூறிய பிறகும்கூட அவரது கட்சித் தலைவர் சம்பந்தர் அய்யா இதுவரை எதுவும் கூறவில்லை.
இலங்கையில் தற்போது நல்லாட்சி நடைபெறுவதாக கூறி வெளிநாடுகள் தஞ்சமடைந்த தமிழ் அகதிகளை திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு முதலமைச்சருக்கே பாதுகாப்பு அற்ற நாட்டில் சாதாரண தமிழருக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும் என்பதை இவ் வெளிநாடுகளுக்கு மனிதவுரிமைவாதிகள் தெரியப்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment