•படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும் இந்துக்களே.
இவர்களின் படுகொலையை சிவசேனையும் , இந்திய அரசும் கண்டிக்குமா?
இவர்களின் படுகொலையை சிவசேனையும் , இந்திய அரசும் கண்டிக்குமா?
(சிவசேனை தலைவர் சச்சிதானந்தம் அய்யா எங்கிருந்தாலும் மேடைக்கு வருமாறு அழைக்கப்படுகிறார்.)
யாழ் பல்கலைக்கழக மாணவர் இருவர் பொலிசாரினால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
முன்பு இவ்வாறான படுகொலைகள் நடக்கும்போது பயங்கரவாதி இருவர் கொலை என அறிக்கை கொடுப்பார்கள்.
ஆனால் இம்முறை விபத்து மரணம் என அறிக்கை கொடுத்துள்ளனர். இது ஒன்றுதான் மாற்றம். மற்றும்படி கொலைகள் தொடருகின்றன.
இங்கு ஏற்படும் அச்சம் என்னவெனில் இனி இப்படியான விபத்து மரணங்கள் தமிழர் பகுதிகளில் தொடரப் போகுதா என்பதே.
ஏனெனில் இது ஒரு சாதாரண சம்பவம் என்று பொலிஸ் மாஅதிபர் கூறுகிறார். பொலிசாரை கைது செய்தது தவறு என்று மகிந்த ராஜபக்ச கூறுகிறார்.
தமிழரை சுட்டுக்கொல்ல பொலிசாருக்கு அதிகாரம் உண்டு என்று சிங்கள உறுமய தலைவர் கூறுகிறார்.
ஆனால் நலல வேளையாக சிங்கள் மக்கள் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இதனை வன்மையாக கண்டித்ததுடன் இதற்கு எதிராக போராடப் போவதாக அறிவித்துள்ளது.
இங்கு எனது கேள்வி என்னவெனில் இந்துக்களைப் பாதுகாக்க சிவசேனை ஆரம்பிப்பதாக கூறியவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?
இறந்த இந்து மாணவர்களுக்காக இந்துப் பிரதமர் மோடி அவர்கள் இலங்கை அரசைக் கண்டிப்பாரா?
அல்லது இலங்கையில் இந்துக்களைக் கொல்லும் படையினருக்கு தொடர்ந்தும் பயிற்சி வழங்கப் போகிறாரா?
குறிப்பு- நம்மவர்களில் சிலர் பொலிசார் இப்படி சுடுவதற்கு நீதிபதி இளஞ்செழியன்தான் காரணம் என்று பழியை திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள்.
யாழ் மாவட்டத்தில் கஞ்சா வியாபாராம், மற்றும் ரவுடியிசம் எந்தவிட இடைஞ்சலும் இன்றி அமோகமாக நடைபெற வேண்டும் என விரும்புவோரே அதற்கு இடைஞ்சலாக இருக்கும் நீதிபதி மீது பழி போட முயலுகின்றனர்.
No comments:
Post a Comment