•மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாதவர்கள்
மக்களை எதற்காக கூட்டங்களுக்கு அழைக்க வேண்டும்?
மக்களை எதற்காக கூட்டங்களுக்கு அழைக்க வேண்டும்?
நேற்றைய தினம் லண்டன் ஈஸ்ட்காம் நகரில் அரசியல் செயற்பாட்டாளர் ஜ.ரி சம்பந்தன் அவர்கள் எழுதிய “ தமிழ் அரச ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள்” என்னும் அரசியல் நூல் வெளியிடப்பட்டது.
வெளியீட்டில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அரசியல்வாதி சரவணபவன் அவர்கள் தனது உரையில்,
•“எழுக தமிழ்” பேரணி தனக்கு பதவி கிடைக்காததால் சுரேஸ் பிரேமசந்திரன் நடத்திய பேரணி என்று அரசியல் பேசினார்.
•தேர்தலில் தோற்ற கஜேந்திரன் அணியினர் தமிழருக்கு தீர்வு கிடைப்பதை குழப்புவதற்காக நடத்தியது “எழுக தமிழ்” பேரணி என்று அரசியல் பேசினார்.
•தீர்வு ஒரு வருடத்தில் கிடைக்காது. அது கிடைக்க மேலும் தாமதமாகலாம் என்று அரசியல் பேசினார்.
ஆனால் கூட்டத்தில் இத்தனையையும் கேட்டுக்கொண்டிருந்த பார்வையாளர் ஒருவர் எழுந்து கேள்வி கேட்க முயன்ற போது “ இது புத்தக வெளியீடு. இங்கு நான் அரசியல் பேச விரும்பவில்லை” என்று கூறி அவருக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார் இந்த அரசியல்வாதியான சரவணபவன்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு எந் நேரத்திலும் பதில் அளிக்க கடமைப்பட்டவராவர்.
அதுவும் ஒரு எம்.பி அரசியல் பேசியபோது அவரிடத்தில் மக்கள் கேள்வி கேட்கும்போது அரசியல் பேச விரும்பவில்லை என கூறி பதில் அளிக்க மறுப்பது அப்பட்டமான ஜனநாயக மறுப்பாகும்.
எட்டுக் கோடி ரூபாவுக்கு சொகுசு வாகனம் இறக்குமதி செய்தவர் ,
ஜனாதிபதி மைத்திரியை அழைத்து தன் மகளுக்கு பிறந்தநாள் கொண்டாடியவர்,
மக்களின் உணர்வுடன் நடந்த எழுக தமிழ் பேரணியை யாரோ சிலரின் வஞ்சக நிகழ்வு என கொச்சைப்படுத்தும்போது
உண்மையான தமிழ் மகன் எப்படி மௌனமாக இருக்க முடியும்?
கொடுக்கும் இடியப்பம் சொதி வடையை சாப்பிட்டுவிட்டு அவர்கள் பேசும் பேச்சை எல்லாம் மௌனமாக கேட்டு விட்டு வருவதற்கு தமிழ் மக்கள் என்ன உணர்ச்சி அற்ற பிண்டங்கள் என்று நினைக்கிறார்களா?
மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாத இவர்களுக்கு எதற்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி?
மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க தயார் அற்ற இவர்கள் எதற்கு கூட்டங்கள் நடத்த வேண்டும்?
எதற்கு அந்த கூட்டங்களுக்கு மக்களை அழைக்க வேண்டும்?
தங்களுக்கு மாறி மாறி மாலையும் பொன்னாடையும் அணிந்து மகிழ வேண்டும் என்றால் வீட்டில் குசினிக்குள் மனிசிக்கு முன்னால் செய்ய வேண்டியதுதானே?
எதற்காக லண்டனுக்கு வரவேண்டும்? எதற்காக போட்டோ பிடித்து படம் காட்ட வேண்டும்?
இனி இவர்களுக்கு செருப்புமாலை அணிவித்து கூழ் முட்டையால் அடிக்க வேண்டும்.
No comments:
Post a Comment