•வோட்டு போட்ட மக்களோ பட்டினியில்- ஆனால்
பாராளுமன்ற உறுப்பினர்களோ சொகுசு வண்டியில்.
பாராளுமன்ற உறுப்பினர்களோ சொகுசு வண்டியில்.
தீர்வை வரியின்றி கோடிக் கணக்கான ரூபா பெறுமதியான சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்த 66 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளிவந்துள்ளது.
இந்த சொகுசு வாகன இறக்குமதியால் அரசுக்கு 40 பில்லியன் ரூபா இழப்பு வருடமொன்று ஏற்படுகிறது.
இதில் 4 பேர் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்களின் விபரம் வருமாறு,
•மாவை சேனாதிராஜா- 4 கோடி ரூபா பெறுமதியான டயாட்டா லாண்ட குறுசர் சொகுசு வாகனம்.
•சிறீதரன் - 5 கோடி ரூபா பெறுமதியான கம்மர் சொகுசு வாகனம்
•சித்தாhத்தன் - 4 கோடி ரூபா பெறுமதியான டயாட்டா குறுசர் சொகுசு வாகனம்
•சிவமோகன் - 4 கோடி ரூபா பெறுமதியான டயாட்டா லாண்ட் குறுசர் சொகுசு வாகனம்.
ஏற்கனவே சரவணபவன் எம்.பி எட்டுக் கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனத்தை வெறும் 1250 ரூபா வரி மட்டுமே கட்டி, வரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செய்துள்ளார்.
இந்நிலையில், கடந்தவாரம் கிளிநொச்சியில் 12 வயது சிறுவன் 17 கள்ளுப் போத்தல்களுடன் பிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளான்.
கல்வி கற்ற வேண்டிய சிறுவன் கள்ளு விற்கிறான் என்ற கவலை கொஞ்சம்கூட இன்றி கிளிநொச்சி எம்.பி 4 கோடி ரூபாவுக்கு சொகுசு வாகனம் இறக்குமதி செய்கிறார்.
என்ன கொடுமை இது?
ஒரு வருடத்தில் தீர்வு வரும் என்றார்கள். ஆனால் தீர்வை வரியற்ற சொகுசு வண்டிகள்தானே வருகிறது. ஒருவேளை நாம்தான் பிழையாக விளங்கிவிட்டோமோ?
No comments:
Post a Comment