•மலையக தமிழர்களும் தமிழ் இனத்தவர்கள்தானே. அவர்களுக்காக வடக்கு கிழக்கு தமிழ் தலைவர்கள் ஏன் குரல் கொடுக்கக்கூடாது?
இழப்பதற்கு உயிர் தவிர வேறு எதுவும் அற்ற மலையக தமிழ் மக்கள் இன்றும்கூட கவனிப்பாரற்று வறுமையிலேயே வாடுகின்றனர்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்சங்கம் இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம். அதன் தலைவராக ஆறுமுகன் தொண்டமான் இருக்கிறார்.
சம்பந்தர் அய்யா போல் இவரும் தமக்கு பதவிகள், சலுகைகள் பெறுவதில் குறியாக இருக்கிறாரே யொழிய தமது மக்களுக்காக எதையும் செய்வதில்லை.
இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மலையக மக்களுக்கு மட்டும் அந்த சம்பள உயர்வுகள் வழங்கப்படவில்லை.
ஆயிரம் ரூபா வரை சம்பள உயர்வு கேட்ட அந்த மக்கள் இப்போது 720 ரூபா தந்தால் போதும் என்கிறார்கள். ஆனால் அதைக்கூட தோட்ட முதலாளிகள் வழங்குவதற்கு தயாரில்லை.
சுமார் 3லட்சம் தொழிலாளர்களை நம்பி 10 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு ஒப்பந்தப்படி கடந்த வருடம் மார்ச் மாதம் சம்பள உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் கடந்த ஒன்றரை வருடத்தில் 19 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதும் இன்னும் முதலாளிகள் சம்பள உயர்விற்கு சம்மதிக்கவில்லை.
இலங்கையின் மொத்த வருமானத்தில் அதிக பங்கை ஈட்டிக்கொடுக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளைக்கூட கவனிக்கும் நோக்கில் அரசு இல்லை.
வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதேதவிர இன்னும் வீடுகள் கட்டப்படவில்லை. அந்த மக்கள் அங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட லயன்களிலேயே இப்பவும் வாழ்கிறார்கள்.
மலையக தமிழர்களின் நலன்களைக் கவனிப்பதற்காக எனக் கூறி இந்திய தூதராலயம் ஒன்று கண்டியில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தியாவும் இதவரை எந்த உதவியும் அந்த மக்களுக்கு செய்யவில்லை.
இனவாதக் கட்சி என்று தமிழ்தேசிய கூட்டமைப்பால் கூறப்படும் ஜே.வி.பி கடசி எம்.பி ஒருவர் இந்த மக்ளின் அவல நிலையை பாராளுமன்றத்தில் கூறி அவர்களுக்க நியாயம் வழங்குமாறு கேட்டிருக்கிறார்.
ஆனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தங்களைக் கூறிக்கொள்ளும் சம்பந்தர் அய்யாவோ அல்லது தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களோ இதுவரை இந்த மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை.
மலையக தமிழர்களும் தமிழ் இனத்தவர்கள்தானே. அவர்களுக்காக ஏன் வடக்கு கிழக்கு பிரதிநிதிகள் குரல் கொடுக்கக் கூடாது?
அது சரி. அவர்கள் வடக்க கிழக்கு தமிழ் மக்களுக்கே குரல் கொடுப்பதில்லை. இந்த நிலையில் எப்படி மலையக மக்களுக்காக குரல் கொடுப்பார்கள் என எதிர்பாhப்பது?
செய்தி- இலங்கையில் இதுவரையில் இறக்குமதி செய்யப்பட்ட கார்களில் மிகவும் விலை உயர்ந்த கார் அண்மையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் காரின் பெறுமதி சுமார் 158 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அரசு முதலாளிக்களுக்கான அரசு என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது.
No comments:
Post a Comment