Monday, October 31, 2016

•சுட்டவன் தமிழன் என்பது அல்ல முக்கியம் செத்தவன் தமிழன் என்பதே நமக்கு முக்கியம்.

•சுட்டவன் தமிழன் என்பது அல்ல முக்கியம்
செத்தவன் தமிழன் என்பதே நமக்கு முக்கியம்.
சுட்ட துப்பாக்கி ஏ.கே 47யா அல்லது ரி 56யா என்பது முக்கியம் அல்ல
மாறாக சுட்டவன் இலங்கை அரசின் படையைச் சேர்ந்தவன் என்பதே நமக்கு முக்கியம்.
எதிரியிடம் துப்பாக்கி உண்டு. எம்மிடம் இல்லையே என்பது முக்கியம் அல்ல.
மாறாக துப்பாக்கி ஒரு தோளில் இருந்து இன்னொரு தோளுக்கு மாறும் என்பதே நமக்கு முக்கியம்.
வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ள இலங்கை அரசின் 60 ஆயிரம் ராணுவத்தில் எத்தனை தமிழன?; எத்தனை சிங்களவன்? என்பது முக்கியம் இல்லை. மாறாக 60 ஆயிரம் துப்பாக்கிகளை நாம் பெறுவதற்கு அரசு எமக்கு வாய்ப்பளித்துள்ளது என்பதே நமக்கு முக்கியம்.
நாம் தோல்வி அடைந்தவர்கள் அல்ல. மாறாக இன்னும் வெற்றி பெறவில்லை என்பதே முக்கியம். இறுதி வெற்றி உறுதி எமக்கு.
செய்தி- யாழ் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களை சுட்டவர்கள் தமிழ் பொலிசார்.
தமிழனாக இருந்தால் என்ன , சிங்களவனாக இருந்தால் என்ன இராணுவமும் பொலிசும் இலங்கை அரசின் ஏவல் நாய்களே ஆளும் வர்க்கத்தின் கைக்கூலிகளே.
அதனால் அந்த நாய்கள் தமக்கு போடப்படும் இறைச்சி துண்டிற்காக எந்தவித வேறுபாடும் இன்றி சிங்களவனையும் கொல்கிறது. தமிழனையும் கொல்கிறது.
1971ல் கதிர்காமத்தில் மன்னம்பேரி என்ற சிங்கள யுவதியை நிர்வாணமாக வீதியில் கட்டி இழுத்துச் சென்று பாலியல் வல்லுறவு செய்ததோடு அவருடைய பெண் உறுப்பில் வெடி வைத்துக் கொன்றவர்கள் சிங்கள பொலிசாரே.
1989ல் 60 ஆயிரம் சிங்கள இளைஞர்களை கொன்று அவர்களுடைய உடலை ஆற்றில் மிதக்க விட்டவர்கள் சிங்கள ராணுவத்தினரே.
இன்று சிங்கள பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை அடக்குபவர்களும், நீர்கொழும்பில் இந்திய கம்பனிக்கு எதிராக தண்ணீருக்காகப் போராடிய சிங்கள மக்களை சுட்டு அடக்கியபவர்களும் இந்த சிங்கள பொலிசாரும் ராணுவத்தினருமே.
பொலிசின் ராணுவத்தின் துணையின்றி இலங்கை அரசு ஒரு கணம் கூட அதன் அடக்குமுறையையும் ஒடுக்குமுறையையும் நீடிக்க முடியாது.
அதனால்தான் தவறு செய்யும் பொலிஸ் மற்றும் ராணுவ அதிகாரிகள் தண்டிக்கப்படாததுடன் அவர்களுக்கு பதிவி உயர்வும் பணமும் வழங்கப்படுகிறது.
ஆயுதம் தாங்கிய பொலிஸ் , இராணுவம் மேற்கொள்ளும் அரச பயங்கரவாதத்திற்கு ஆயுதம் தாங்கியே பதிலடி கொடுக்க முடியும் என்று போராளிகள் கருதினார்கள்.
அதனால்தான் போராட்ட ஆரம்ப காலத்தில் அக்கிரமம் புரிந்த பஸ்தியாம்பிள்ளை போன்ற அரச விசுவாசியான, தமிழ் பொலிசார் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
போராளிகளுக்கு முதல் எஸ்.எம்.ஜி துப்பாக்கி பஸ்தியாம்பிள்ளையிடமிருந்தே கைப்பற்றப்பட்டது என்பதை நினைவில் கொள்வோம்.
எனவே,
அடக்குமுறை செய்தால் அடக்குமுறைக்கு எதிராக போராடுவோம்
ஒடுக்குமுறை மேற்கொண்டால் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவோம்
ஆக்கிரமிப்பு செய்தால் அதற்கு எதிராக போராடுவோம்
அடிமைத்தனத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்
யுத்தத்தை எம்மீது திணித்தால் அதனை எமக்கான விடுதலையாக மாற்றுவோம்.

No comments:

Post a Comment