•பூனைகளின் நியாயம் எலிகளுக்கு பொருந்தாது.! அதேபோன்று
பேரினவாதத்தின் நியாயங்கள் ஒருபோதும் தமிழினத்திற்கு பொருந்தாது!
பேரினவாதத்தின் நியாயங்கள் ஒருபோதும் தமிழினத்திற்கு பொருந்தாது!
ஒரு நாள் ஒரு பூனையானது எலி ஒன்றை பிடித்து கடித்து சாப்பிட முயன்றது. அப்போது வேதனை தாங்க முடியாத எலியானது உரத்துக் கத்தியது. உடனே பூனையானது எலி கத்தியதால் தன் அமைதி கெட்டுவிட்டது என்றும் இது நல்லிணக்கத்திற்கு எதிரானது என்றும் கூறியது. எனவே எலியை தண்டிக்க வேண்டும் என்றும் வழக்கு போட்டது. நீதிபதியாக பூனை தன்னையே நியமித்துக் கொண்டது. பூனையின் நீதிமன்றத்தில் எலிக்கு ஒருபோதும் நியாயம் கிடைப்பதில்லை.
அதேபோல் பேரினவாதமானது அடக்கி ஒடுக்கப்படும் இனம் தனக்கான உரிமை கேட்டு குரல் எழப்பும்போது அதை நல்லிணக்கத்திற்கு எதிரானது என்று கூறி அடக்க முனைகிறது
ஆனால் பூனை எலியை கொல்லும்போது எலி கத்துவதை தவறு என்றோ அல்லது அது நல்லிணக்கத்திற்கு எதிரானது என்றோ எந்தவொரு எலியும் கூறுவதில்லை.
ஆனால் தமிழ் இனம் பேரினவாதத்தால் நசுக்கப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்கும்போது அதனை தவறு என்றும் நல்லிணக்கத்திற்கு எதிரானது என்றும் சில தமிழர்களே கூறுகின்றனர்.
எலிகளுக்கு இருக்கும் உணர்வுகூட சுமந்திரன் போன்ற சில தமிழர்களுக்க இல்லாமற் போனது தமிழினத்தின் சாபக்கேடுதான்.
ஆனால் பூனைகளின் நியாயம் எலிகளுக்கு எப்படி பொருந்துவதில்லையோ அதேபோன்று சிங்கள பேரினவாத்தின் நியாயம் தமிழர்களுக்க பொருந்தாது என்பதை புரியவைப்போம்.
No comments:
Post a Comment