•உண்மையிலே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வா?
அல்லது வெறும் சம்பிரதாயமான ஒரு நிகழ்வா?
அல்லது வெறும் சம்பிரதாயமான ஒரு நிகழ்வா?
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரட்டை நகர உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அப்படி என்ன வரலாற்று முக்கியத்துவம்?
இதே கிங்ஸ்ரன் மாநகரம் எற்கனவே ஜெர்மன் நகரத்துடனும் தென்கொரிய நகரத்துடனும் இரட்டை நகர உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளது. அதனால் விளைந்த நன்மைகள் என்ன?
லண்டன் கவுன்சில்கள் பணம் போதாமல் திண்டாடுகின்றன. எனவே கிங்ஸ்ரன் கவுன்சில் வடமாகாண சபைக்கு பெரிய உதவிகள் எதுவும் செய்துவிட முடியாது.
எல்லாவற்றையும்விட இந்த இரட்டை நகர உடன்படிக்கைக்கு பிரதமர் ரணிலும் லண்டனுக்கான இலங்கை தூதுவரும் பெரிதும் உதவி புரிந்ததாக முதலமைச்சர் விக்கினேஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளார்.
சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய விரும்பாத பிரதமர்,
காணாமல் போனோரை கண்டு பிடிக்க உதவி செய்யாத பிரதமர்,
இடம் பெயர்ந்தோரை மீள் குடியேற்ற அக்கறை எடுக்காத பிரதமர்,
வடபகுதியில் குவிக்கப்ட்டிருக்கும் ராணுவத்தை அகற்ற விரும்பாத பிரதமர்,
இரட்டை நகர உடன்படிக்கைக்கு உதவுகிறார் என்பததான் சந்தேகத்தை தருகிறது.
யாராவது கொஞ்சம் இது குறித்து விளக்கம் தருவீர்களா?
No comments:
Post a Comment