•“ஒரு அயோக்கியனின் கடைசிப் புகலிடம் தேசபக்தி” - அறிஞர் சாமுவேல் ஜோன்சன்
செய்தி- இந்தியாவுக்கு வரும் பிரமபுத்திரா ஆற்றின் கிளை நதியை சீனா மறித்துவிட்டதால் சீனாவின் பட்டாசுகளை இந்தியர்கள் பகிஸ்கரிக்க வேண்டும்- நடிகர் விவேக் வேண்டுகோள்.
காவிரியில் தண்ணீர்விட கர்நாடாகா மறுக்கிறது. அதைப் பற்றி கவலைப்படாமல் பிரமபுத்திராவில் தண்ணீரை மறித்த சீனாவுக்கு எதிரான விவேக்கின் இந்திய உணர்வு பாராட்டத் தக்கது.
தன்னை இந்தியனாக கருதும் விவேக் அவர்களிடம் நான் கேட்க விரும்பும் கேள்வி என்னவெனில்,
பாகிஸ்தான் சுட்டு இறந்த 18 பேரும் “இந்தியர்கள்” என்கிறார்கள். ஆனால் இலங்கை சுட்டு இறந்த 600 பேரையும் தமிழக மீனவர் என்று கூறுகிறார்களே. அது ஏன்?
18 பேர் இறந்தமைக்காக உடனடியாக எல்லைதாண்டி பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் 600 மீனவர் கொல்லப்ட்டமைக்காக ஒரு முறைகூட இலங்கை ராணுவம் மீது தாக்குதல் நடத்தப்படவில்லையே. அது ஏன்?
பதில் தாக்குதல் நடத்தாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் தமிழக மீனவர்களை சுட்ட இலங்கை ராணுவத்திற்கு பயிற்சியும் ஆயுதமும் இந்திய அரசால் வழங்கப்படுகிறதே. இது என்ன நியாயம்?
அப்படியென்றால் தமிழர்கள் “இந்தியர்கள்” இல்லையா?
“இந்தியன”; விவேக் பதில் தருவாரா?
No comments:
Post a Comment