Monday, October 10, 2016

மக்களுக்காகத்தான் தலைவர்களே யொழிய தலைவர்களுக்காக மக்கள் அல்ல!

•மக்களுக்காகத்தான் தலைவர்களே யொழிய
தலைவர்களுக்காக மக்கள் அல்ல!
தமிழ் மக்களுக்கான தலைவர்கள் தமிழ் மக்களுக்காக போராட வேண்டுமே யொழிய தலைவர்களுக்காக மக்கள் அடிமையாக இருக்க மடியாது.
சீனி மீதான வரி 7 மடங்க அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆதனால் சீனியின் விலை கிலோவிற்க 15ரூபா அதிகரிக்கப்படவுள்ளது.
ஏதிர்க்கட்சிதலைவர் சம்பந்தர் இந்த விலை அதிகரிப்பை கண்டிக்காததுடன் அதற்கு எதிராக மக்கள் போராடுவதையும் தடுக்கிறார்.
நுடப்பது நல்லாட்சி என்கிறார்கள். ஆனால் தினமும் விலைகள் அதிகரிக்கப்படுகிறது. யுத்த காலத்தில்கூட பொருட்கள் இந்தளவு விலை அதிகரிக்கப்படவில்லை.
யுத்தம் முடிந்தால் பாலும் தேனும் ஆறாக ஒடும் என்றார்கள். ஆனால் யத்தம் மடிந்து 7 வருடங்களின் பின்னரும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றனவேயொழிய மக்களுக்க எந்த நன்மையும் கிட்டவில்லை.
சொகுசு வாகனங்களுக்கு இறக்குமதி வரி சலுகை வழங்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கோடிக் கணக்கான ரூபாய் பெறுமதியான வாகனங்கள் வழங்கப்படுகிறது.
அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை.
காணாமல் போனோர் கண்டு பிடிக்கப்படவில்லை
இடம் பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை
நல்லாட்சி அரசில் தமிழ் மக்களுக்கு இதவரை எந்த நன்மையம் கிடைக்கவில்லை.
தமிழ் மக்களின் தலைவர்கள் தங்களுக்கு வசதிகளும் சலுகைகளும் பெறுகின்றார்களேயொழிய தமக்கு வோட்டு போட்ட மக்களுக்கு எதுவும் பெற்றுக் கொடுக்கவில்லை.
மக்கள் தாங்களாகவே போராடினாலும் அதை தடுப்பதிலேயே இந்த தமிழ் தலைவர்கள் குறியாக இருக்கின்றனர்.
சம்பூர் மக்களுக்கு இந்த தமிழ் தலைவர்கள் யாருமே உதவி புரியவில்லை. இருந்தும் அந்த மக்கள் தாங்களாகவே போராடி வெற்றி பெற்றள்ளார்கள்.
மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை. மக்கள் அமைதியை விரும்பினாலும் பிரச்சனைகள் போராடாமல் இருக்க விடுவதில்லை.
ஒரு வரடத்தில் தீர்வு பெற்று தருவதாக சம்பந்தர் அய்யா வாக்குறுதி அளித்திருந்தார். எனவே ஒரு வருடத்திற்கள் தீர்வ பெற்று தரவில்லையாயின் தார்மீக ரீதியாக சம்பந்தர் அய்யா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும். அவ்வாறு அனைவரும் முன்வராவிடினும் ஆகக் குறைந்தது சம்பந்தர் அய்யா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
வாக்குறுதியை நிறைவேற்றாவிடின் அரசியலில் இருந்து ஒதுங்கும் அளவிற்கு சம்பந்தர் அய்யா மானஸ்ததர் இல்லைதான். ஆனால் பதவியையாவது ராஜினாமா செய்ய அவர் முன் வரவேண்டும்.
அவர் முன் வருவாரா?

No comments:

Post a Comment