•வந்ததாரை வாழவைத்த தமிழன்
தான் வாழ தன்னையே எரிக்கிறான்
தான் வாழ தன்னையே எரிக்கிறான்
எரிந்தது பசு மாடாக இருந்திருந்தால் இந்நேரம் பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்திருப்பார்
எரிந்தது காளைமாடாக இருந்திருந்தால் இந்நேரம் மேனாகா காந்தி நீதிமன்றம் சென்றிருப்பார்
எரிந்தது நாய்க் குட்டியாக இருந்திருந்தால் இந்நேரம் நீதிமன்றம் தலையிட்டு நீதி வழங்கியிருக்கும்.
எரிந்தது டில்லியில் உள்ள மாணவனாக இருந்திருந்தால் நடிகை சுகானிசினி கூட்டமாவது வீதியில் இறங்கி ஆங்கிலத்தில் நியாயம் கேட்டிருக்கும்
என்ன செய்வது? எரிந்தது விக்னேஸ் என்ற தமிழ் மாணவன் ஆயிற்றே!.
இந்தியாவில் பசு மாட்டிற்கு , காளை மாட்டிற்கு, ஏன் நாய்க்; குட்டிக்கு இருக்கும் மதிப்பு கூட தமிழனுக்கு இல்லையே!
வுந்தவரை எல்லாம் வாழ வைத்த தமிழன் இன்று தண்ணீருக்காக தன்னையே எரிக்கும் நிலை வந்துவிட்டதே!
எதிரி நாடாக இருந்தாலும் தண்ணீரை மறிக்கக்கூடாது என்று உலக சட்டம் கூறுகிறது. ஆனால் தமிழன் இந்தியனாக இருந்தும் தண்ணீர் தர மறுக்கிறார்களே!
தமிழன் செய்த தவறு என்ன? தண்ணீர்; கேட்பது பெரிய குற்றமா? கடையை எரித்தார்கள். வுhகனத்தை எரித்தார்கள். மூத்திரம் வேண்டுமா என திமிராக கேட்டார்கள்.
முகநூலில் பதிவு போட்ட தமிழ் மாணவனை நடு ரோட்டில் வைத்து பலர் அடித்தார்கள். தமிழ் வயோதிபரை கன்னடம் பேசுமாறு தாக்கினார்கள்.
இத்தனைக்கும் மேலாக தமிழ் டிறைவரை நிர்வாணமாக்கி அடித்தார்கள். அதனை மீட்டியாக்ளில் பரப்பி மிரட்டுகிறார்கள்.
இத்தனைக்கும் பிறகும் தமிழன் பொறுமையாகவே பந்த் செய்தான். இப்போது விக்ணேஸ் என்ற மாவணன் இதற்காக தன்னையே எரித்து இறந்துள்ளான்.
ஆனால் இப்பவும்கூட இந்திய ஒருமைப்பாடு பற்றி தமிழனுக்கே போதிக்கப்படுகிறது. வுன்முறையை கையில் எடுக்கக்கூடாது என்று போதிக்கப்படுகிறது.
பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. அந்த எல்லையைம் தாண்டி தமிழன் பொறுமையாக கிடக்கிறான்.
தன்னையே எரிக்கத் துணிந்த தமிழனுக்க இந்திய அரசை எரிக்க எந்தளவு நேரம் பிடிக்கும்?
தன்னையே அர்ப்பணிக்கத் துணிந்த தமிழனுக்க இந்திய ஒருமைப்பாட்டை தூக்கியெறிய எந்தளவு நேரம் பிடிக்கும்?
தனிநாடாக விடுதலை பெற்றிருந்தால் தம் இனத்திற்க இப்படி ஓரு நிலை வந்திருக்குமா என சிந்திக்க தமிழனுக்க எந்தளவு நேரம் பிடிக்கும்?
வெகுவிரைவில் தமிழன் இந்திய அரசக்கு பாடம் புகட்டுவான். கர்நாடகாவில் தமிழன் தாக்கப்ட்டதும் தமிழ் நாட்டில் மட்டுமல்ல லண்டன் கனடா மற்றம் யாழ்ப்பாணத்தில் கூட தமிழன் குரல் கொடுத்துள்ளான்.
வரலாற்றில் முதன்; மiறையாக எவ்வளவோ கெடுபிடிகள் மிரட்டல்கள் மத்தியில் யாழ்ப்பாணத்தில் அதுவும் இந்திய தூதரகத்திற்க முன்னால் பகிரங்கமாக தமிழன் தன் குரலைக் கொடுத்தள்ளான்.
ஒரு தமிழனுக்க தீங்கு இழைத்தால் உலகில் உள்ள தமிழன் எல்லாம் குரல் கொடுப்பான் என்பதை வரலாறு முதல் முறையாக பதிவ செய்துள்ளத.
இந்திய அரசுக்கு தமிழன் கொடுத்திருக்கும் முதல் அதிர்ச்சி இது.
No comments:
Post a Comment