•அடக்குமுறை இருக்கும் மட்டும்
அடக்குமுறைக்கு எதிரான போராட்டமும் இருக்கும்!
அடக்குமுறைக்கு எதிரான போராட்டமும் இருக்கும்!
யாழ் பல்கலைககழக மாணவர் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.
கொட்டும் மழையிலும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டி வீதியை மறித்து போராடி வருகின்றனர்.
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் நியாயம் கோரி போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கிளிநொச்சி பாடசாலை மாணவர்களும் “பொலிஸ் அராஜகம் ஒழிக” என கோசம் போட்டவாறு ஊர்வலம் சென்றுள்ளனர்.
இலங்கையில் மட்டுமன்றி இந்தியாவில் சென்னையில் இலங்கை தூதரகத்தை தமிழ் இனவாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
லண்டன், கனடா போன்ற நாடுகளிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் இப் படுகொலைகளை கண்டித்து போராடவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இவையாவும் அடக்குமுறை இருக்குமட்டும் அதற்கு எதிராக தமிழ் மக்களின் போராட்டமும் இருக்கும் என்பதை உலகிற்கு காட்டுகின்றன.
அதுமட்டுமன்றி எந்தவொரு மூலையிலும் தமிழன் பாதிக்கப்பட்டாலும் அதற்கு எதிராக உலகெங்கும் உள்ள தமிழன் ஒன்றுபட்டு குரல் கொடுப்பான் என்ற நிலை தோன்றியுள்ளது.
எனவே தமிழன் போராட வேண்டுமா அல்லது அமைதியாக இருக்க வேண்டுமா என்பதை தமிழன் தீர்மானிப்பதில்லை மாறாக தமிழன் மீது அடக்குமுறையை நடத்துவோரே நிர்ப்பந்திக்கின்றனர்.
No comments:
Post a Comment