தனது நாட்டு கடன் தொகை தெரியாத பிரதமர்!
இலங்கை தற்போது செலுத்தவேண்டிய கடன் 64.9 பில்லியன் டொலர் என அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர். அரசாங்கத்தின் வருவாயில் 95.4 வீதம் கடனை செலுத்துவதற்காகவே செலவாகின்றது.
ஆனால் இலங்கையின் கடன் நிலவரம் குறித்த துல்லியமான புள்ளிவிபரங்கள் எங்களிடம் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்திருக்கிறார்.
இதன்மூலம் உலக வரலாற்றில் தனது நாட்டு கடன் தொகை தனக்கு தெரியாது பாராளுமன்றத்தில் தெரிவித்த முதல் பிரதமர் என்ற பெருமையை ரணில் பெற்றுள்ளார்.
எந்தளவு வெட்கக் கேடான விடயம் இது? கடந்த ஒருவருடமாக இவர் என்ன ம- - பிடிங்கிக் கொண்டிருந்தார்?
நேற்றைய தினம் 17 போத்தல் கள்ளுடன் 12 வயது தமிழ் சிறுவன் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளான்.
கல்வி கற்க வேண்டிய வயதில் சிறுவன் ஒருவன் கள்ளு விற்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்று பிரதமர் ரணில் கவலை கொள்ளவில்லை. மாறாக சிறுவனை கைது செய்து தண்டிக்கிறார்.
இதற்கு முன்னர் பரீட்சைக் கட்டணம் கட்டுவதற்காக திருடியதாக சிறுவன் ஒருவன் இதே கிளிநொச்சி நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டிருக்கிறான்.
தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் இதே நிலைதான் காணப்படுகிறது.
அண்மையில் 16வயது சிங்கள யுவதி ஒருவர் தன் நோயாளியான தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்று விபச்சாரம் செய்து பிடிபட்ட செய்தி வந்துள்ளது.
ஒரு 16 வயது சிங்கள இளம் யுவதி மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்று விபச்சாரம் செய்தது குறித்து பிரதமர் ரணில் வெட்கம் அடையவில்லை.
அவருடைய அக்கறை எல்லாம் முதலாளிகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்ய எப்படி வரி சலுகை கொடுக்கலாம் என்பது பற்றியே இருக்கிறது.
தமிழ் சிறுவன் கல்வி கற்க வாயப்பு இன்றி கள்ளு விற்கிறான். ஆனால் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் 8 கோடி ரூபாவுக்கு சொகுசு வாகனம் இறக்குமதி செய்கிறார்.
சிங்கள யுவதி தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக விபச்சாரம் செய்கிறார். ஆனால் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 700 சொகுசு வாகனங்கள் வரி சலுகைகளுடன் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது.
குடி தண்ணீருக்குகூட வட் வரி போடும் பிரதமர் ரணில் முதலாளிகளுக்கு தொடர்ந்து வரி சலுகைகள் செய்கிறார்.
இது சிங்களவருக்கான அரசு அல்ல முதலாளிகளுக்கான அரசு என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அதனால்தான் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தர் அய்யாவும் கண்டும் காணாதது மாதிரி நீண்ட உறக்கத்தில் இருக்கிறார்.
No comments:
Post a Comment