•நாம் ஓட வேண்டும்
அது முடியாத போது நடக்க வேண்டும்
அதுவும் முடியாத போது தவழ்ந்தாவது செல்ல வேண்டும்.
ஆனால் ஒருபோதும் செயலற்று நிற்கவே கூடாது.
அது முடியாத போது நடக்க வேண்டும்
அதுவும் முடியாத போது தவழ்ந்தாவது செல்ல வேண்டும்.
ஆனால் ஒருபோதும் செயலற்று நிற்கவே கூடாது.
அடக்குமுறைக்கு எதிராக எம்மால் இயன்றவழிகளில் நாம் போராடிக்கொண்டே இருத்தல் வேண்டும்.
அடக்குமுறையை ஏற்று அடிமையாக அடங்கி வாழு ஒருபோதும் நினைத்தல் கூடாது.
போராடிய அமைப்பின் தலைமையை அழித்தால் போராட்டம் அழிந்துவிடும் என்று முன்னர் அடக்குமுறையாளர்கள் நினைத்தனர்.
ஆனால் புதிய தலைமைகள் தோன்றி போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதை கண்டு அதனை எப்படி நசுக்குவது என்று யோசித்தனர்.
போராடும் தலைமையுடன் போராடிய மக்களில் ஆயிரக்கணக்கில் அழித்தால் போராட்டத்தை அடக்கிவிடலாமா என்று முள்ளிவாய்க்காலில் முதல் முறையாக பரீட்சித்துப் பார்த்தனர்.
ஆனால், தலைமையையோ அல்லது ஆயிரக் கணக்கில் மக்களையோ அழித்தாலும் அடக்கப்படும் மக்கள் தொடர்ந்து போராடுவார்கள் என்பதை தமிழ் மக்கள் வரலாற்றில் நிரூபித்துள்ளனர்.
தமிழக ஓட்டுப்பொறுக்கி அரசியல் தலைமைகள் துரோகம் செய்த வேளையிலும் தமிழக மக்கள் தங்கள் ஆதரவை ஈழத் தமிழருக்கு தொடர்ந்து நல்கி வருகின்றனர்.
மலேசியா சென்ற இனப் படுகொலையாளி மகிந்த ராஜபக்சவை விரட்டியடித்து அங்குள்ள தமிழர்கள் தமது அதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
லண்டன், கனடா, மற்றும் புலம்பெயர்நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் வீதியில் இறங்கிப் போராட ஆரம்பித்துள்ளனர்.
இரு பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து வடக்கு கிழக்கில் மட்டுமல்ல உலகம் பூராவும் உள்ள தமிழ் மக்கள் போராட ஆரம்பித்துள்ளனர்.
தமிழ் மக்களின் ஓட்டைப் பெற்று பதவி பெற்றவர்கள் தமிழ் மக்களுக்காக போராடாமல் துரோகம் செய்கிறார்கள்.
தமக்கு கோடிக் கணக்கான ரூபா பெறுமதியான சொகுசு வாகனம் இறக்குமதி செய்வதில்தான் அவர்கள் கவனம் இருக்கிறதேயொழிய தமிழ் மக்கள் நலனில் அக்கறை இல்லை.
தலைவர்களுக்கு பதவி மற்றும் சலுகைகளை வழங்கி அவர்களை விலைக்கு வாங்குவதன் மூலம் தமிழ் மக்களை அடக்கிவிட முடியும் என அரசு நினைக்கிறது.
ஆனால் தமிழ் மக்கள் திரண்டு எழுந்து போராடி அரசுக்கு தக்க பதிலடி வழங்குகிறார்கள்.
ஆம் வரலாறு ஒருபோதும் பின்னோக்கி செல்வதில்லை. அது எப்போதும் முன்னோக்கியே செல்கிறது.
No comments:
Post a Comment