Monday, October 10, 2016

•தமிழக அரசே! சிறையில் அடைக்கப்பட்ட தோழர்களை உடனே விடுதலை செய்!

•தமிழக அரசே!
சிறையில் அடைக்கப்பட்ட தோழர்களை உடனே விடுதலை செய்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்தமைக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 04.10.16 யன்று பாலூர் ரயில் நீர் நிலையம் முன்பாக தமிழ்தேச மக்கள் கட்சியானது மோடியின் உருவப் பொம்மையை எரித்து போராட்டம் நடத்தியிருந்தது.
இதனால் தமிழ்தேச மக்கள் கட்சியைச் சேர்ந்த தோழர்கள் செந்தமிழ் குமரன், வெற்றி தமிழன், சதுரை பிரபாகரன், செங்கை தமிழரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பொதுவாக இவ்வாறான போராட்டங்களின் போது கைது செய்யப்படுவோர் மாலையில் விடுதலை செய்யப்படுவது வழக்கம். ஆனால் இத் தோழர்கள் அவ்வாறு விடுதலை செய்யப்படாமல் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜெயா அம்மையாரின் ஆட்சியில் தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்காக போராடுவோர் சிறையில் அடைக்கப்படுகின்றனர். சித்திரவதை செய்யப்படுகின்றனர்.
ஏற்கனவே மதுரையில் கைது செய்யப்பட்ட தமிழ்தேசமக்கள் கட்சி தோழர்கள் ஜந்து பேர் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மதுரை சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இவர்கள் மீதான விசாரணை முடிவடைந்தும் தீர்ப்பை வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். ஜாமீன் விடுதலைகூட வழங்காமல் அடைத்து வைத்திருக்கின்றனர்.
சிறையில் அடைப்பதன் மூலம், கொடிய சித்திரவதைகள் மூலம் தமிழ் இன உணர்வாளர்களின் போராட்டங்களை மழுங்கடிக்க முடியும் என தமிழக அரசு கனவு காண்கிறது.
ஆனால் தமிழக அரசின் கனவு ஒருபோதும் நனவாகப் போவதில்லை. ஏனெனில் தோழர் தமிழரசன் பாதையில் ஆயிரம் ஆயிரம் உணர்வாளர்கள் பயணிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
ஜெயா அம்மையாரின் நலன் வேண்டி போராடுவதாக கூறியிருந்தால் இத் தோழர்களுக்கு தமிழக பொலிசாரே பாதுகாப்பு கொடுத்திருப்பார்கள். பத்திரிகைகள் போட்டி போட்டுக்கொண்டு செய்திகள் போட்டிருப்பிருப்பார்கள்.
எல்லாவற்றுக்குமேலாக தமிழக அமைச்சர்களின் வெகுவான கவனிப்பு பணமும் கூட கிடைத்திருக்கும்.
ஆனால் இத் தோழர்கள் அவை எதற்கும் மயங்காது தமிழக மக்களின் நலனுக்காக போராடியிருக்கிறார்கள்.
இத்தகைய தோழர்களின் உண்ணதமான உணர்வையும் தியாகத்தையும் பாராட்டுவோம். அவர்களின் விடுதலைக்காக குரல் கொடுப்போம்.

No comments:

Post a Comment