•நாய் சுடுவதுபோல் மாணவர் இருவரை சுட்டுக் கொன்றுவிட்டு
அலரிமாளிகையில் தீபாவளி கொண்டாடுவது நல்லிணக்கம் இல்லை
இதை நம்பி ஏமாறுவதற்கு தமிழன் ஒன்றும் இளிச்சவாயன் இல்லை.
அலரிமாளிகையில் தீபாவளி கொண்டாடுவது நல்லிணக்கம் இல்லை
இதை நம்பி ஏமாறுவதற்கு தமிழன் ஒன்றும் இளிச்சவாயன் இல்லை.
யாழ்ப்பாணத்தில் இரு பல்கலைகழக மாணவர்கள் வீதியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.
இதுவரை பிரதமரோ அல்லது ஜனாதிபதியோ மாணவர்கள் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறவில்லை.
அவ் ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு நட்ட ஈடு கூட கொடுக்க முன்வரவில்லை.
இனிமேல் இப்படியான கொலைகள் நடக்க இடமளிக்கப்டாது என்று உறுதிமொழி அளிக்கவும் அவர்கள் விரும்பவில்லை.
ஆனால் அதேவேளை “படையினரை தான் ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டேன”; என்று ஜனாதிபதி மைத்திரி கூறியுள்ளார்.
அதாவது தமிழ் மக்களை கொன்ற படையினரை தண்டிக்க விடமாட்டேன் என்று தமிழ் மக்களின் வாக்கில் ஜனாதிபதியான மைத்திரி கூறுகிறார்.
அதுமட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்துகொண்டு படையினருக்கு எதிராக கருத்து கூறுவோரையும் அந் நாடுகளின் உதவியோடு தண்டிப்பேன் என திமிராக கூறியுள்ளார்.
இதனிடையே அலரி மாளிகையில் பிரதமரும் ஜனாதிபதியும் தீபாவளி கொண்டாடியுள்ளனர்.
நல்லிணக்கத்திற்காக இவர்கள் தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்று நம்பி ஏமாறுவதற்கு தமிழ் மக்கள் இளிச்சவாயர்கள் இல்லை.
ஏனெனில் தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்சா தமிழில் தீபாவளி வாழ்த்து கூறியதையே கேட்டு பழகிவிட்டார்கள்.
No comments:
Post a Comment