•பற்றி எரிவது வெறும் பஸ்கள் மட்டும் அல்ல,
இந்திய ஒருமைப்பாடு மீது தமிழர் வைத்திருந்த நம்பிக்கையும்தான்!
இந்திய ஒருமைப்பாடு மீது தமிழர் வைத்திருந்த நம்பிக்கையும்தான்!
ஒரே நாளில் 95 தமி;ழ்நாட்டு பஸ்கள் கர்நாடகாவில் எரிக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநில அரசு கைகட்டி நிற்கிறது.
மோடியின் மத்திய அரசோ வெறுமனே வேடிக்கை பார்க்கிறது.
இந்தியாவில் ஒரு மாநிலத்தில் இன்னொரு மாநில மக்கள் தாக்கப்படுகின்றனர்.
பிரதமர் மோடி இது மாநிலப் பிரச்சனை எனவே தலையிடமாட்டேன் என்கிறார்.
ஆனால் பாகிஸ்தானில் பலூஸ்தானில் தலையிடுவேன் என்று அடம் பிடிக்கிறார்.
தமிழர்களும் இந்தியர்கள்தானே. அவர்கள் தாக்கப்படும்போது அவர்களைக் காப்பாற்ற வேண்டியது பிரதமர் கடமை அல்லவா!
ஆனால் பிரதமர் மோடியோ அம்பானிக்கு சிம் விற்பதே தன் கடமை என கருதுகிறார்.
என்னே அவமானம் இது!
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்க வேண்டாம் என்று பிஜே.பி கட்சியினர் கூறினார்கள். ஆனால் நான் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு அமைய தண்ணீர் வழங்கினேன். ஆனால் பி.ஜே.பியினர் வன்முறையில் இறங்குகின்றனர் என்று கர்நாடக முதல்வர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இப்போது புரிகிறதா? பி.ஜே.பி யின் ஒருமைப்பாடு இதுதான். இனியாவது தமிழர்கள் இதை உணர வேண்டும்.
கர்நாடகாவில் ஒரு தமிழர் தாக்கப்ட்டு அது அனைத்து ஊடகங்களிலும் பரப்பப்பட்டும் கர்நாடக முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார்.
சென்னையில் ஒரு கன்னட முதலாளியின் ஓட்டலை பூட்டியவுடன் கர்நாடக முதல்வர் “உடனே தடுத்து நிறுத்துங்கள்” என்று தமிழக முதல்வரிடம் கேட்கிறார்.
காவிரியில் தண்ணீர் தரவில்லையாயின் நெய்வேலி மின்சாரம் கர்நாடாவுக்கு வராது என்றவுடன் வழிக்கு வருகிறார்கள்.
அவர்கள் எந்த மொழியில் பேசினார்களோ அதே மொழியில் தமிழர்கள் பதில் கொடுக்க ஆரம்பித்தவுடன் இம்முறை அனுபவம் வித்தியாசமாக இருக்கிறது.
ஆம். அடிக்கு அடிதான் சரியான மொழி. வேறு எந்த மொழியும் அவர்களுக்கு புரியாது. பயன்தராது.
No comments:
Post a Comment