•மோடியும் பாகிஸ்தான் மீதான யுத்தமும்!
1988ம் ஆண்டளவில் யாழ்ப்பாணத்தில் நெல்லியடியில் மெண்டல் பத்மநாதன் என்ற மனநோயாளியை சுட்டுக்கொன்றுவிட்டு புலிகளின் உயர்மட்ட தளபதி ஒருவரை சுட்டுக்கொன்றதாக இந்திய அமைதிப்படை அறிவித்தது.
அதன் பின்னர் காஸ்மீரில் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை என செய்தி வரும்போதெல்லாம் எனக்கு மெண்டல் பத்மநாதன் கொலையே நினைவுக்கு வருகிறது.
ஆனால் இந்திய அரசு இன்னொரு நாட்டிற்கள் சென்று செய்யும் தாக்குதலில்கூட பொய் சொல்லும் என்று நான் ஒருபோதும் எண்ணியதில்லை.
இரு நாட்களுக்கு முன்னர் எல்லைதாண்டி சென்று பாகிஸ்தானில் தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
இப்போது அப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என்று பாகிஸ்தான் மறுத்திருப்பதோடு சர்வதேச பத்திரிகையாளர்களை அழைத்து சென்று சம்பவ இடத்தை காண்பித்துள்ளது.
இனிமேல் இதற்கு மோடி என்ன கூறப்போகிறார் என்று தெரியவில்லை. ஆனால் உண்மையிலே மோடி பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும் என்ற விரும்பினால் பின்வரும் வழிகளில் நடவடிக்கை எடுக்கலாம்.
1.பாகிஸ்தான் வழியாக இந்தியா வரும் ஈhhன் எண்ணெயை நிறுத்தலாம்.
2.பாகிஸ்தானில் இந்திய முதலாளி அதாணி மேற்கொள்ளம் 4000 மெகாவாட் மின்சார ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம்.
3.கொத்ரெஜ் தன் பல்லாயிரம் கோடி தொழில்களை பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றலாம்.
4.ஜிண்டால் தன் இரும்பு தொழில்களை பாகிஸ்தானில் இருந்து வெளியேறச் சொல்லலாம்.
5.பெப்சி, கோக் கம்பனிகளை பாகிஸ்தானில் தொழில் செய்தால் இந்தியாவில் இருந்து வெளியேற்றுவோம் என மிரட்டலாம்.
இப்படி பல நடவடிக்கைகளை மோடி எடுக்க முடியும். மோடி செய்வாரா?
அதைவிடுத்து 10 ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றுவிட்டு பாகிஸ்தானை தனிமைப்படுத்திவிட்டோம் என எதற்காக முழங்க வேண்டும்?
மோடி இந்திய மக்களை ஏமாற்றகிறார். மோடி தனது அரசியல் லாபங்களுக்காக இந்திய மக்கள் மீது யுத்தத்தை திணிக்க முயல்கிறார்.
இந்திய மக்கள் மீது கொடிய யுத்தத்தை மோடி திணித்தால் அதனை புரட்சிகர யுத்தமாக இந்திய மக்கள் மாற்றுவார்கள்.
No comments:
Post a Comment