Sunday, May 18, 2014

கலைஞர் அவர்களே!

கலைஞர் அவர்களே!

• கடலிலே தூக்கியெறிந்தாலும் கட்டுமரமாகி தமிழர்களுக்கு பயன்படுவேன் என்றீர்கள். ஆனால் தேர்தலில் உங்கள் வெற்றிக்காக 7 பேர் விடுதலைக்கு எதிராகக் குரல் கொடுத்தீர்கள்.

• சிதறு தேங்காயாக உடைத்தாலும் தமிழ் மக்களுக்கு உண்ண பயன்படுவேன் என்றீர்கள். ஆனால் உங்களின் சுய நல அரசியலுக்காக ரயில் குண்டு வெடிப்பை முஸ்லிம் மக்கள் மீது சுமத்துகிறீர்கள்.

• தமிழ் மக்களுக்காக ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தேன் என்றீர்கள். ஆனால் முள்ளிவாயக்காலில் 40ஆயிரம் தமிழர்கள் அழிக்கப்ட்டபோது துரோக காங்கிரஸ் ஆட்சியைக் காப்பாற்றி நாடகம் ஆடினீர்கள்.

• பல்லிகும் கொடும் தேளுக்கும் மத்தியில் பாளை கொடும் சிறையில் தமிழ் மக்களுக்காக வாடியதாக கதை எழுதினீர்கள். ஆனால் பதவிக்காகவும், குடும்பத்திற்காகவும் நீங்கள் தமிழ் மக்களை கைவிட்டதைக் கண்டோம்.

சென்னை ரயில் குண்டு வெடிப்பை
ஆண்டவர் நீங்கள் கண்டித்தீர்கள்.
ஆள்பவர் அம்மையார் கண்டிக்கிறார்.
வாய்திறக்காத மன்மோகன்சிங்கும் கண்டிக்கிறார்.
ஆயிரக் கணக்கில் முஸ்லிம்களைக் கொன்ற மோடியும் கண்டிக்கிறார்.

குண்டு வைத்தவன் மனநோயாளி இல்லை என்றால்
உங்களிடம் நாம் கெட்க ஒரு கேள்வி உண்டு.
இதுவரை ஆண்ட அரசியல்வாதிகளின் அராஜகம்தானே
சாதாரண மனிதனையும் மிருகமாக மாற்றுகிறது.
குண்டு வைக்க தூண்டுகிறது.
இதை உங்களால் மறுக்க முடியுமா?

குண்டு வைத்தது யார் என்று இன்னும் கண்டு பிடிக்கவில்லை.
விசாரணையே முறையாக இன்னும் ஆரம்பிக்காத நிலையில்
அவசரப்பட்டு ஏன் முஸ்லிம் மக்கள் மீது பழியை போடுகிறீர்கள்?

பி.ஜே.பி ஆட்சி வரப் போகின்றதற்காக
அந்த ஆட்சியில் உங்கள் குடும்ப நலத்திற்காக இடம் பெறும் பொருட்டு
உங்களை நம்பிய முஸ்லிம் மக்களுக்கு துரோகம் செய்ய எப்படி மனம் வந்தது?

• காஸ்மீரில் தினமும் அப்பாவி மக்களை கொல்லும் இந்திய ராணவத்தை

• சதீஸ்கரில் ஆதிவாசிகளை நக்சலைட்டுகள் என கொல்லும் இந்திய ராணுவத்தை

• மணிப்பூரில் அப்பாவி பெண்களை கற்பழிக்கும் இந்திய ராணுவத்தை

இதுவரை கண்டிகக்காத உங்களுக்கு
ரயில் குண்டு வெடிப்பை கண்டிக்க
என்ன தகுதி இருக்கு?

நீங்கள் உலகத் தமிழினத் தலைவர் அல்ல
நீங்கள் உலக மகா கேவலம்.
சீ.. வெட்கம்.

No comments:

Post a Comment